அம்பாள் பாடல்கள்

அம்பாள் பாடல்கள் : நவராத்திரி சிறப்பு அம்பாள் துதி, அம்பாள் பாடல்கள், நவராத்திரிக்கு சொல்ல வேண்டிய அம்பாள் ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள், சகலகலாவல்லி மாலை, வாராஹி மாலை, அஷ்ட லெட்சுமி வருகைப் பதிகம்.

அம்பாள் பக்தி பாடல்கள்

சர்வ மங்களம் அருளும் அம்பிகை பாடல்கள், வெள்ளிக்கிழமை பக்தி பரவசமூட்டும் அம்பாள் பாடல்கள் தொகுப்பு : நவ‌ராத்திரி, அஷ்டமி, வெள்ளி, செவ்வாய் கேட்க‌ வேண்டிய‌ அம்பாள் பாடல்கள். நவராத்திரி அன்று வீட்டில் கொலு வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல்களைப் பாடி பூஜை செய்து வழிபட்டு அம்பாள் அருளைப் பெறுங்கள்.

நவராத்திரிக்கு சொல்ல வேண்டிய அம்பாள் பாடல்

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி
காசி விசாலாட்சி கருணாம்பிகையே!
தருணம் இதுவே தயை புரிவாயம்மா!
பொன் பொருள் எல்லாம்
வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!
ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்
என் அன்னை நீயே அம்மா!
மங்களம் வழங்கிடும் மகாசக்தியே!
மங்கலத் தாயே நீ வருவாயே!
என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே!
எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே!
பயிர்களில் உள்ள பசுமையில்
கண்டேன் பரமேஸ்வரி உனையே!
சரண் உனை அடைந்தேன்
சங்கரி தாயே, சக்தி தேவி நீயே!
அரண் எனக் காப்பாய்
அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே!