YouTube Music's 'Smart Downloads' Feature saves Up to 500 Favourite Tracks - for Premium Users Only
Gadgets

YouTube Music's 'Smart Downloads' Feature saves Up to 500 Favourite Tracks - for Premium Users Only

யூடியூப் மியூசிக் "ஸ்மார்ட் டவுன்லோட்ஸ் (Smart Downloads) " என்ற அம்சத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது, இது 500 இசை டிராக்குகளை தானாகவே பதிவிறக்கம் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணைய இணைப்ப இல்லாத நிலையில் பாடல்களை கேட்டு மகிழ்வதற்கான வசதிதான் யூடியூப் இன் தற்போதைய‌ Offline Mixtape ஆகும். உங்கள் கேட்கும் முறைகளின் அடிப்படையில் உள்ளடக்கத்தை ஆஃப்லைனில் பதிவிறக்கம் செய்ய YouTube வழங்கிய "ஆஃப்லைன் மிக்ஸ்டேப் (Offline Mixtape)" அம்சத்தை இந்த‌ புதிய அம்சம் மாற்றியமைக்கிறது.

Smart Downloads

  • Smart Downloads தற்போதுள்ள Offline Mixtape வசதியை மாற்றி அமைக்கும்
  • இதற்கு YouTube பிரீமியம் சந்தா தேவை
  • இந்த அம்சம் யூடியூப் மியூசிக் பயன்பாட்டு பதிப்பு 3.19.54 இல் காணப்படும்

முந்தைய அம்சம் ஆஃப்லைன் பிளேபேக்கிற்காக 100 மியூசிக் டிராக்குகளை சேமிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், சமீபத்திய அம்சத்தில் டிராக்குகளின் வரம்பை 500 ஆக விரிவுபடுத்தியுள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுக்கு பிடித்த பாடலுக்கு அடுத்துள்ள "லைக்" பொத்தானை அழுத்துவது மட்டும்தான். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பாடல்கள் Smart Downloads வசதியுடன் இரவு நேரங்களில் மொபைல் சாதனம் Wi-Fi இணைப்பில் இருக்கும்போது தரவிறங்க ஆரம்பித்துவிடும்.

இந்த‌ புதிய அம்சம் யூடியூப் மியூசிக் பிரீமியம் மற்றும் யூடியூப் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.