longest-pedestrian-suspension-bridge-switzerland
பூமி

World's longest pedestrian suspension bridge in Switzerland

உலகின் மிக நீண்ட நடை மேம்பாலம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் திறக்கப்பட்டு உள்ளது. ஓரப் / சார்லஸ் குயோனன் என்றழைக்கப்படும் இந்த பாலம், 279 அடி உயரத்தில், 1,620 அடி நீளம் மற்றும் 2 அடி அகலத்தில் கட்டப்பட்டு உள்ளது.

1621 அடி நீளம், 279 அடி உயரத்தில், சுவிட்சர்லாந்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சார்லஸ் குயோனன் சஸ்பென்ஷன் பாலம் (Charles Kuonen Suspension Bridge) உலகின் மிக நீண்ட பாதசாரிகளுக்கான‌ தொங்கு (சஸ்பென்ஷன்) பாலம் எனும் முந்தைய‌ சாதனையை முறியடித்து பெயர்பெற்றுள்ளது.

மத்திய ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தின் விஸ்ப் மாவட்டத்தில் உள்ள, ராண்டாவின் ஜெர்மேட் மற்றும் கிரேசேன் ஆகிய‌ இரு மலைகளை இணைக்கும் வகையில், இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது. பாதசாரிகள் நடக்கும் வேளையில், பாலம் அங்குமிங்குமாக‌ தள்ளாடாமல் ஆடாமல் இருக்க, 8 டன் கேபிள்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. நடைபயணம் செல்ல விரும்புபவர்களுக்காக அமைக்கப்பட்ட இந்த பாலத்தில் நடந்தவாறே ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள மலைகளின் அழகையும் கண்டு களிக்கலாம்.