அண்ட்ராய்ட் இயங்குதளத்தினை (Android OS) கொண்டு கைப்பேசிகளை அறிமுகம் செய்ய ஆரம்பித்த நோக்கியா நிறுவனம் மீண்டும் தனக்கான இடத்தை உலக கைப்பேசி சந்தையில் பிடித்துள்ளது எனலாம்.

தற்போது புதிதாய் மற்ற‌ ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு (smart phones) சவால் விடும் வகையில் 5 கேம‌ராக்களைக் கொண்ட கைப்பேசியினை முதன் முறையாக அறிமுகம் செய்யவுள்ளது.

Nokia 9 மாடல் ஸ்மார்ட் கைப்பேசித்தான் அது. Nokia 9 தொடர்பான வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

Nokia 9 ஆனது 5.00 அங்குல அளவுடைய pOLED திரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Snapdragon 845 Processor மற்றும் பிரதான நினைவகமாக 6GB RAM கொண்டுள்ளது.

Nokia 9 கேமரா

Nokia 9 கைபேசி 12 மெகாபிக்சல்களைக் கொண்ட 5 பிரதான கேம‌ராக்கள் Nokia 9 இல் காண‌ப்படுகின்றன‌.

இவற்றுள் 3 கறுப்பு வெள்ளை கேம‌ராக்களும், 2 RGB வர்ண கேம‌ராக்களும் ஆகும்.

தவிர 20 மெகாபிக்சல்களைக் கொண்ட செல்ஃபி கேம‌ராவும் தரப்பட்டுள்ளது. வீடியோவைப் பாருங்கள். இந்த‌ கேமராக்கள் எவ்வாறு செயல்படுகின்றன‌ என்பது தெரிந்து விடும்.