harvey-hurricane-destructions
சுற்றுச்சூழல்

Amazing video shows Harvey flooding

ஹார்வி ( Harvey) பேரழிவினை ஏற்படுத்திய‌ புயல் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் இந்த‌ வீடியோவில் அதைப் பார்த்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆகஸ்ட் 26 ஆம் திகதி காலை 9:30 மணியளவில் படம் பிடிக்கத் துவங்கி, ஆகஸ்ட் 27 ம் திகதி மதியம் வரை படமாக்கப்பட்ட‌ வீடியோ காட்சி.கார்கள் வெள்ளத்தில் மூழ்க்ய்வதும், அடித்துச் செலவதும், தங்கள் வாகனம் வெளியே எடுக்க முயற்சிக்கும் ஒரு கார் சொந்தக்காரர் என‌ பார்க்கலாம்.

2005 ஆம் ஆண்டிலிருந்து யுனைட்டட் ஸ்டேட்ஸினை (major hurricanes in the US ) தாக்கிய‌ முதல் பெரிய சூறாவளியாக சூறாவளி ஹார்வி (Harvey Hurricane) இருந்தது. அது ஒரு பெரிய வடுவை ஏற்படுத்திவிட்டது. குறைந்தபட்சம் 64 உயிரிழப்பு, ஆனால் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர வேண்டியிருந்தது, 300,000 மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர், பில்லியன்கணக்கான டாலர்கள் சொத்து சேதம் ஏற்பட்டது.

மூடிஸ் அனலிட்டிக்ஸ் ( Moody’s Analytics ) படி புயலின் மொத்த பொருளாதார செலவு $ 81 பில்லியனுக்கும் $ 108 பில்லியனுக்கும் இடையே இருக்கக்கூடும் என‌ மதிப்பிடப்பட்டுள்ளது - அல்லது அதற்கும் அதிகமாகவும் இருக்கலாம். ஹார்வி புயலின் பயங்கரம் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையதா இல்லையா என்பது தெளிவாக இல்லை. புவி வெப்பமயமாதல் (Global warming) தனிக் காரணியாய் சூறாவளி நிகழ்வுகளை பாதிக்காது என்றும், சில காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் எறியப்படுகிறது. உலக வளிமண்டல அமைப்பு (World Meteorological Organization) , ஹார்வி புயலினால் உருவான‌ மழையின் அளவு காலநிலை மாற்றத்தால் அதிகரித்துள்ளது எனக் கூறுகிறது.