வாராஹி காரிய சித்தி மந்திரம் |Sri varahi mantra for wealth, prosperity and knowledge
செல்வவளம் பெருக
க்லீம் வாராஹமுகி |ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி |ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||
எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க
ஓம் சத்ருசம்ஹாரி| சங்கடஹரணி| மம மாத்ரே |ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய|சர்வ சத்ரூம் நாசய நாசய ||
சர்வ சித்திகளும் செல்வமும் பெற
ஸ்ரீம் பஞ்சமி சர்வசித்திமாதா| மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||
வறுமை நீங்க
ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||
*** வராஹி தெய்வத்தை வணங்கி வெற்றி அடையுங்கள். சகல ஐஸ்வரியங்கள் பெருகட்டும் ***
வாராஹி அம்மனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்
சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீ வாராஹி, பராசக்தியின் படைத் தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள். இந்த தேவிக்கு பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராஹி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகிய பெயர்களும் உண்டு.
கஷ்டம், கடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட, ஒரு தேங்காயை உடைத்து, இரண்டு மூடிகளிலும் நெய்விட்டு, பஞ்சு திரி போட்டு, குங்குமம் இட்டு தீபம் ஏற்றி, அந்த தீபம் தானாகவே மலையேற விடவேண்டும். பிரச்சினைகள் எதுவும் இல்லாவிட்டாலும்கூட பஞ்சமி திதி அன்று இவ்வாறு விளக்கேற்றி வழிபடலாம்.
- “வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும்.
- நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் வாராஹியை வழிபடுவது சிறப்பு.
- மனநலம் குன்றியவர்கள், வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள் திங்கட்கிழமைகளில் வழிபட வேண்டும்.
- நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வழிபட செவ்வாய்க்கிழமையிலும்,
- கடன் தொல்லை அகல புதன் கிழமைகளிலும்,
- குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளிலும் ஸ்ரீ வாராஹியை வழிபட வேண்டும்.
உங்கள் கருத்து : comment