ரிலையன்ஸ் வாடிக்கையாள‌ர்கள் டுவிட்டர் ட்வீடில் ரீசார்ஜ் செய்யலாம்

Gears

Reliance Mobile (RCOM)'s ‘SmartCare on Twitter’, a feature that lets customers manage their accounts through Twitter.

ஆதாரம் ரிலையன்ஸ் ஸ்மார்ட் கேர் இணையதளம்

ரிலையன்ஸ் மொபைல் (ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்) டுவிட்டரில் (Twitter) ஸ்மார்ட்கேர் (SmartCare) எனும் வசதியினை அறிமுகம் செய்து அதன் வாடிக்கையாளர்களை ட்விட்டர் மூலம் கணக்குகளை நிர்வகிக்க வழிசெய்கிறது. இந்த‌ வசதியைப் பயன்படுத்த, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் "@RelianceMobile " என்ற‌ டுவிட்டர் ஐடி க்கு டுவீட் (Tweet) செய்து தங்கள் கணக்குகளைப் பற்றிய‌ பல்வேறு தகவல்களைப் பெற்றுக் கொள்ள‌லாம். வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட‌ கீ சொற்களைப் (keywords) பயன்படுத்தி தகவல்களைப் பெற்றுக் கொள்ள‌ முடியும்.

இந்த‌ வசதியினை பெற‌ ரிலையன்ஸ் மொபைல் வாடிக்கையாள‌ர்கள் முதலில் ஸ்மார்ட்கேர் (SmartCare) இணையதளத்தில் தங்களின் கைபேசி எண் மற்றும் டுவிடட்டர் கணக்கிணை பதிவு செய்துகொள்ள‌ வேண்டும். பதிவு செய்ததும் பதிவினைச் சரிபார்க்க‌ உங்களுக்கான‌ ஒற்றைக் கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். ஸ்மார்ட்கேர் (SmartCare) பயனாளிகள் நேரடியாக ட்வீட் வழியாக பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் தங்கள் கட்டணம் பற்றிய‌ தகவல்களை சேமிக்கவும் முடியும்.

வாடிக்கையாளர்கள் தேவையான ஹாஷ்டேகுகளை (hashtags) பயன்படுத்தி, (எ.கா), #myoffers பயன்படுத்தி ஆஃபர் பற்றிய‌ தகவல்களையும், #databalance பயன்படுத்தி மிஞ்சியுள்ள‌ தொகை பற்றியும், #buy
பயன்படுத்தி புது பிளான்களை (data plan) வாங்கிக்கொள்ள‌ முடியும். முழு ஹாஷ்டேகுகளை (hashtag) பெற‌ இணையதளத்திற்குச் செல்லவும்.

நாள் : 03.10.2015 திருத்தம் : 19.10.2015

புதியவை / Recent Articles