Barack Obama, Ex-American President
Gadgets

Barack Obama’s Latest Tweet Became the Most-Liked in Twitter History

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படமும் அதனைத் தழுவி வெளியிட்ட‌ கருத்தும் பல‌ இலட்சம் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறது.

ஒபாமா, சனிக்கிழமை இரவு டுவிட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த‌ போஸ்டிங்கில் உள்ள‌ புகைப்படத்தில் ஜன்னல் ஓரத்தில் பல இனத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஒன்றாய் ஒபாமாவை பார்த்தபடியே நிற்கின்றனர். அவர்களை நோக்கி ஒபாமா கொஞ்சி மகிழ்வது போன்ற காட்சி. புகைப்படத்தின் கீழ் தனது கருத்து ஒன்றையும் வெளியிட்டிருந்தார். கருத்தில் 'நிறத்தாலும் இனத்தாலும் மதத்தாலும் மற்றொருவரை வெறுப்பதற்காக யாரும் பிறப்பதில்லை' என அதில் பதிவிட்டிருந்தார்.

இப்புகைப்படத்தினை டுவிட்டரில் இந்நேரத்தில் பதிவிடுவதன் காரணம் ?

சனிக்கிழமை அன்று அமெரிக்க‌ விர்ஜினியா மாகாணத்தின், சார்லேட்டஸ்வில்லி நகரில் வெள்ளையர்கள் நடத்திய பேரணியில் கார் ஒன்று அத்துமீறி புகுந்தது. இந்த சம்பவத்தில் 32 வயது பெண் ஒருவர் இறந்தார். 19 பேர் காயமடைந்தனர், மேலும் இரு காவலர்களும் இறந்தனர். இந்நிலையில்தான், ஒபாமா தன்னிடம் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தினை மனதை உருக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஒபாமா பதிவிட்ட சில மணி நேரத்தில் அந்தப் புகைப்படம் அதிக‌ லைக்குகளைப் பெற்று வைரலாகியது. இந்த டுவிட்டை 4.1 மில்லியன் பேர் லைக் செய்திருந்தனர். 1.5 மில்லியன் பேர் ரீ டுவிட் செய்திருந்தனர்.

டுவிட்டர் தளத்தில், அதிக முறை ரீட்விட் செய்யப்பட்ட 5-வது பதிவு மற்றும் ஒபாமாவின் டுவீட்களில் அதிக முறை பகிரப்பட்டது என இந்த‌ டிவீட்னடாது வரலாறு படைத்தது.