Bus Hiring Service
Travel

RedBus Bus New Service : Hiring service let users book buses, tempos & cars.

ibibo வுக்கு சொந்தமான‌ பேருந்து முன்பதிவு செய்யும் தளமான‌ ரெட்பஸ் இப்போது பஸ் ( RedBus Bus Hire Service ), மினிபஸ், கார்களை வாடகைக்காக‌ அதன் பயனர்களுக்கு வழங்க‌ உள்ளது. தற்போது இந்த‌ சேவையானது பெங்களூரு, மும்பை, புனே, சென்னை, ஐதராபாத், டெல்லி, அகமதாபாத் ஆகிய‌ நகரங்களிலும், வெகு விரைவில் ஏனைய‌ நகரங்களிலும் கிடைக்கப்பெறும்.

இந்த பாரம்பரிய‌ பேருந்து பகிர்வு உண்மையில் ரெட்பஸ்ஸினை ஒரு முன்னோடியாக கூடுதலான‌ சேவையையும் வழங்க‌ அனுமதிக்கும். மேலும் இந்த‌ புது முன்னேற்றும் ஆனது ரெட்பஸ் இனை இன்டர்சிட்டி வண்டி சேவைதனை வழங்கி வருகின்ற‌ ஓலா, உபர் நிறுவனங்களுக்கு நிகராகவும், போட்டியுடன் சேவைபுரிய வைக்கும்.

மேலும் RedBus ஒரு படி மேலே சென்று, கார்களுடன், பயனர்களுக்கு பலவிதமான‌ வாகனங்களை (ஓட்டுநர்களுடன்) வாடகைக்குப் பெற‌ உதவுகிறது. சொகுசு பஸ்கள், வழக்கமான பேருந்துகள், மினி பஸ் மற்றும் டெம்போக்கள் உட்பட இச்சேவையில் பெற‌ முடியும்.

புக்கிங் செய்வதற்கு, பயனர்கள் முதலில், பயணம் நகருக்குள்ளா, அல்லது நகருக்கு வெளியேவா, மற்றும் தேதிகள், நேரம் போன்ற‌ பய‌ண விவரங்களை வழங்க வேண்டும்.

பயனாளிகள், பயணிகள் எண்ணிக்கை, மற்றும் ஏசி அல்லது ஏசி அல்லாத வாகனம் போன்ற பிற விவரங்களையும் வழங்க வேண்டும். நிறுவனம் 2 மணி நேரத்திற்குள்ளாக‌ நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு தேவையான‌ வாகன இரக‌ விருப்பங்களை தெரிந்தபின் வாடகைச் சேவைதனை புரியத் துவங்கும்.