133 அடி உயர‌ திருவள்ளுவர் சிலையின் பெருமை

ஜனவரி ஒன்று, 2000 ம் வருடத்தில், முக்கடலும் சங்கமமாகும், பாரத‌ அன்னையின் பாதவடிவாய் விளங்கிடும் குமரி முனையில், உலகப் பொதுமறை தந்த‌ திருவள்ளுவரின் திரு உருவச் சிலையானது மக்கள் பார்வைக்காக‌ திற‌க்கப்பட்டது. இச்சிலை திருக்குறளின் விளக்கமாகவும், மண்ணோற்கு தமிழின் சிறப்பினை உணர்த்தும் சின்னமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிலையின் உயரமும், அதன் தத்துவ‌ விளக்கமும்

சிலையின் அடிப்பகுதியில் உள்ள‌ பீடத்தின் 38 அடி உயரமானது, அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் எழுந்து நிற்கும் 95 அடி உயர‌ வள்ளுவரின் உருவ சிலையானது, பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. " அறத்தை அடித்தளமாகக் கொண்டே பொருளும் இன்பமும் அமைந்திடல் வேண்டும் எனும் வாழ்க்கை நெறியை உணர்த்தும் விதமாகவும் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது."

சிலையின் உயரம் 95 அடி
பீடத்தின் உயரம் 38 அடி
சிலையும் பீடமும் சேர்த்து 133 அடி
முகத்தின் உயரம் 10 அடி
உடல் பகுதியின் உயரம் 30 அடி
தொடை பகுதியின் உயரம் 30 அடி
கால் பகுதியின் உயரம் 20 அடி
உச்சந்தலை, கழுத்து, முட்டி மற்றும் பாதமும் சேர்த்து உயரம் 10 அடி
கைத்தவம் 10 அடி
சுவடியின் நீளம் 10 அடி
தோள்பட்டையின் அகல‌ம் 30 அடி
சிகைப் பகுதி 5 அடி
ஆதாரப்பீடம் உள்ளிட்ட‌ சுற்றுசுவர் 60 அடி X 50 அடி
10 யானைகள், ஒவ்வொன்றின் உயரம் 5 அடி(5') 6 அங்குல‌ம் (6")
ஆதாரப்பீடம், சிலை மற்றும் சுற்று சுவர் ஆகியவற்றின் மொத்த‌ எடை 7000 டன்
சிலை அமைப்புத் திட்டம் : அப்போதைய‌ (31.12.1975) மாண்புமிகு தமிழக‌ முதல்வர், கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் திருவள்ளுவரின் திரு உருவச் சிலையமைக்க‌ திட்டம் உருவாக்கப்பட்ட‌து
தலைமை சிற்பி : திரு.வை. கணபதி ஸ்தபதி. சிலையமைப்பு பணிகளில் பங்கேற்ற‌ சிற்பியர் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை ஐந்நூறு (500) ஆகும்.
நாள் : 16.01.2013 திருத்தம் : 18.06.2017

புதியவை / Recent Articles