Uber Yellow cabs
Travel

Now Book an Uber Cab through web (mobile browsers) across India Uber without mobile app.

ஆன்லைன் டாக்சி ஒருங்கிணைப்பாளர் (online cab aggregator), உபர் (Uber), நாக்பூர், கொச்சி, குவஹாத்தி, மற்றும் ஜோத்பூர் ஆகிய‌ நகரங்களில் இணையதள‌ இடைமுகம் (web interface) தொடங்கி மூன்று மாதங்கள் ஆன‌ நிலையில், இப்போது, உபர் கார் (வண்டி) புக்கிங் செய்வதற்கு இந்தியாவில் செயல்படும் அதன் 29 நகரங்களில் தனது சேவையை நீட்டித்துள்ளது. பயனர்கள் நிறுவப்பட்ட உபர் ஆப் (உபர் கைபேசி பயன்பாடு) இல்லாமலே குறைந்த மற்றும் மோசமான‌ இன்டர்னெட் இணைப்பு பகுதிகளிலும் (book Uber cabs from poor internet connectivity areas) மொபைல் உலாவிகள் (mobile browsers) வழியாக‌ ஒரு UberGO வண்டியை பெற்றுக்கொள்ள‌ முடியும்.

பயனர்கள் புக்கிங் செய்துகொள்ள‌ (For Booking Uber Cabs) உள்நுழைய அல்லது புது கணக்கினை உருவாக்க‌ தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்ய‌ வேண்டும் ( (Enter Mobile Numbers during login or New Account creation) அல்லது பேஸ்புக் / கூஃகுளின் கணக்கு (Facebook/Google credentials) பயன்படுத்தி கொள்ளலாம். தற்போது, சவாரிகள் பணம் செலுத்தி (Rides payable only by cash) மட்டுமே பிரயாணம் செய்யுமாறு உள்ளன‌, ஆனால் இன்றைய‌ காலத் தேவை மற்றும் பயன்பாடு கருதி, உபர் பின்னர் டிஜிட்டல் கட்டணம் (digital payment) வசதிகளைச் சேர்த்துக் கொள்ளலாம் என‌ எதிபார்க்கலாம்..

உதவி மற்றும் ரசீது தொடர்பான தகவல் (support and receipt related info) பெற‌, பயனர் உபர் பயன்பாட்டை (Uber app ) உபயோகப்படுத்த‌ வேண்டும் என்றும் மொபைல் இணைய புக்கிங்கில் இந்த‌ வசதியில்லை என்றும் உபர் நிறுவனம் (Uber company) கூறுகின்றது. இப்போது கூகுள் தேடல் வழியாகவும் கூட ஒரூ உபர் காரினை ( Uber ) மொபைல் உபயோகப்படுத்தி பதிவு செய்து கொள்ள முடியும்.