வெளியிட்ட தேதி : 16.12.2016
Waymo, Google's self-driving car company
Automobiles

Waymo, Google's self-driving car company, an independent entity within the technology giant.

ஆல்ஃபாபெட் இன்க் நிறுவனத்தின் சுயமாய் ஓட்டிக்கொள்ளும் தானியங்கி கார் திட்டமானது (Alphabet Inc's Self-driving car project Waymo) வேய்மு (Waymo) எனும் பெயர் மாற்றம் பெற்று தனியொரு சுயாதீன நிறுவனமாக‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்ஃபாபெட் சார் கூகிள் நிறுவனத்தின் இந்த‌ உயர் ரக திட்டம், இப்போது ஏழாவது ஆண்டாக‌, சுய ஓட்டுநர் தொழில்நுட்பத்தில் முன்னணி வகித்து வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் தானியங்கி கார் உற்பத்தி துறையில், உபர் டெக்னாலஜிஸ் (Uber Technologies Inc), ஆப்பிள் இங்க் (Apple Inc) மற்றும் ஏனைய‌ பாரம்பரிய கார் தயாரிப்பு நிறுவனங்களும் கூகிளின் வேய்மு (Google's Waymo) காருக்கு நிகராக‌ சவால் அளித்து வருகின்றன‌.

கடந்த ஆண்டு, கூகிள் அதன் அமெரிக்கச் சோதனை மையங்களை (Testing centers) இரண்டில் இருந்து நான்காக‌ இரட்டிப்பாக்கியதோடு, மேலும் பல‌ பொறியாளர்களை பணியமர்த்தி, அதன் திட்டத்தினை விரிவாக்கம் செய்துள்ளது.
.

>

மனித தலையீடு இல்லாமல் (பூஜ்ய மனித தலையீடு / zero human intervention) ஒரு தானியங்கு வாகனத்தினை முழுநிறைவாக்கிய‌ கூகிள் நிறுவனத்தின் இலக்கு என்பது வளர்ந்துவ‌ரும் வேறு சில வாகன உற்பத்தி நிறுவனங்களின் மாதிரிகளை விட‌ சிறப்பாக‌ உள்ளது. கூகிள் சுய ஓட்டுநர் கார்கள் 2 மில்லியன் மைல்கள் தூரத்தினைச் சோதனையில் கடந்துள்ளது. தற்போதைய‌ சோதனையானது, தெருக்களில் கார்கள் எதிர்கொள்ளும் சூழல்களை சார்ந்து சோதிக்கப்படுகின்றது.

Waymo நிறுவனமான‌து கடந்த அக்டோபர் மாதம் தானிய‌ங்கி கார்களை முழுமையாக வடிவமைத்து முடித்திருந்தது. கடந்த 8 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தானியங்கி கார் முயற்சியானது ஓட்டுநர் களைப்பு, போதை, கவனச் சிறதல்கள் ஆகியவற்றால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டதாகும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.