Volocopter Passenger Drone
Technology

Dubai tests a passenger drone for its flying taxi service

உலகளவில் முதல் பறக்கும் டாக்ஸி சேவையை (flying taxi service) வழங்குவது எனும் ஆவலினை துபாய் முன்னரே தெரிவித்திருந்தது. இதற்கென‌ பல‌ புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தது. இதன்படி ஜெர்மன் நிறுவனமான வோல்கோப்ட்டர் (Volocopter) தயாரித்த 18-ரோட்டார் ஆளில்லா பறக்கும் வாகனத்தினை (டிரோன் பொன்றது), ஜெர்மன் நிறுவனமான டெய்ம்லர் இன் ( German company Daimler ) ஆதரவுடன், சோதனை ஓட்டத்தினை நடத்தியது.

வோல்கோப்ட்டர் ஒரு ஹெலிகாப்டரைப் போல் செங்குத்தாக உயரப் பறக்கவும் கீழிறங்கவும் செய்கின்ற‌ தானியங்கி வாகனமாகும் (automated vehicle). துபாய் இளவரசர் ஷேக் ஹம்டன் பின் மொஹமத் தை ( Dubai Crown Prince Sheikh Hamdan bin Mohammed ) இந்த‌ வோல்கோப்ட்டர் ஐந்து நிமிடம் பறக்கச்செய்து 200 மீட்டர் உயரே பறந்து சென்றது.


2013ம் ஆண்டில் Volocopter எனும் சிறிய ரக ஹெலிகாப்டர் (Helicopter) வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது டாக்ஸிகளுக்கு பதிலாக Volocopter வானூர்தியை பயன்படுத்துவது எனும் பரீட்சிப்பு ஓட்டமும் இடம்பெற்றுள்ளது. மேலும் சில பரீட்சிப்புக்களிலும் இவோல்கோப்ட்டர் (Volocopter) ஈடுபடுத்தப்படவுள்ளது. அவை வெற்றியளிக்கும் பட்சத்தில் எதிர்கால போக்குவரத்து சேவைகளில் டாக்ஸிக்கு பதிலாக வோல்கோப்ட்டர்கள் பயன்படுத்தப்படும் எனத் தெரிய‌ வருகின்றது.
.

Volocopter நிறுவனத்தின் தலைமை அதிகாரியான‌ Florian Reuter கூறுகையில், " தற்போதைய மாதிரியானது ஜி.பி. எஸ் தடங்கள் அடிப்படையில் (flying based on GPS tracks) பறக்கும் திறன் படைத்தவை. எதிர்காலத்தில் முழு உணர்வு திறன் உடன் செயல்படும் மாதிரிகளாக‌ வ‌டிவமைக்கப்படும்", என்று கூறினார். வழியில் இருக்கும் தடைகளைத் தவிர்க்க மற்றும் வழியில் பறக்கும் மற்ற வோல்கோப்ட்டர்கள் (flying taxi) மீது மோதாது தவிர்க்கவும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. எல்லாம் நன்கு நிறைவுற்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் துபாயில் வோல்கோபட்டர் சவாரியினை (Volocopter ride in Dubai within the next five years) நீங்களும் செய்யலாம்.