கனவுநிலையுரைத்தல்
- காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.1211 - கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.1212 - நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.1213 - கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.1214 - நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.1215 - நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.1216 - நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.1217 - துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.1218 - நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.1219 - நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.1220