வெளியிட்ட தேதி : 27.03.2014
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர்
பிரமபுரீசர்;
தேவி பெயர்
திருநிலைநாயகி.

திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.

திருச்சிற்றம்பலம்

பண் - நட்டபாடை

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.. ...... 1.1.1

thoadudaiyasevi yanvidaiyae'riyoar thoove'nmathisoodik
kaadudaiyasuda laippodipoosiyen nu'l'langkavarka'lvan
aedudaiyamala raanmunai :naadpa'ni:n thaeththavaru'lseytha
peedudaiyapira maapuramaeviya pemmaanivanan'rae.


முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு
வற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. ......1.1.2

mu'r'ralaamaiyi'la :naakamoadaena mu'laikkompavaipoo'ndu
va'r'raloadukala naappalithaer:nthena thu'l'langkavarka'lvan
ka'r'ralkaeddaludai yaarperiyaarkazhal kaiyaal thozhuthaeththap
pe'r'ramoor:nthapira maapuramaeviya pemmaanivanan'rae.


நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.. ...... 1.1.3

:neerpara:ntha:nimir punsadaimaeloar :nilaave'nmathisoodi
aerpara:nthavina ve'lva'laisoaraven nu'l'langkavarka'lvan
oorpara:nthavula kinmuthalaakiya voaroorithuvennap
paerpara:nthapira maapuramaeviya pemmaanivanan'rae.


விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. ...... 1.1.4

vi'nmakizh:nthamathi leythathuman'ri vi'langkuthalaiyoaddil
u'nmakizh:nthupali thaeriyava:nthena thu'l'langkavarka'lvan
ma'nmakizh:nthavara vammalarkkon'rai mali:nthavaraimaarpil
pe'nmakizh:nthapira maapuramaeviya pemmaanivanan'rae.


ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.. ...... 1.1.5

orumaipe'nmaiyudai yansadaiyanvidai yoorummivanenna
arumaiyaakavurai seyyavamar:nthena thu'l'langkavarka'lvan
karumaipe'r'rakadal ko'l'lamitha:nthathor kaalammithuvennap
perumaipe'r'rapira maapuramaeviya pemmaanivanan'rae.


மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.. ...... 1.1.6

ma'raikala:nthavoli paadaloadaadala raakimazhuvae:nthi
i'raikala:nthavina ve'lva'laisoaraven nu'l'langkavarka'lvan
ka'raikala:nthakadi yaarpozhil:needuyar soalaikkathirsi:nthap
pi'raikala:nthapira maapuramaeviya pemmaanivanan'rae.


சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.. ......1.1.7

sadaimuyangkupuna lananalanneri veesichchathirveytha
udaimuyangkumara voaduzhitha:nthena thu'l'langkavarka'lvan
kadanmuyangkukazhi soozhku'lirkaanalam ponnanjsi'rakannam
pedaimuyangkupira maapuramaeviya pemmaanivanan'rae.


வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.. ...... 1.1.8

viyarilangkuvarai yu:nthiyathoa'lka'lai veeramvi'laiviththa
uyarilangkaiyarai yanvalise'r'rena thu'l'langkavarka'lvan
thuyarilangkummula ki'rpalavoozhika'l thoan'rumpozhuthellaam
peyarilangkupira maapuramaeviya pemmaanivanan'rae.


தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.. ...... 1.1.9

thaa'nuthalseythi'rai kaa'niyamaalodu tha'ndaamaraiyaanum
:nee'nuthalseythozhi ya:n:nimir:nthaanena thu'l'langkavarka'lvan
vaa'nuthalseymaka 'leermuthalaakiya vaiyaththavaraeththap
pae'nuthalseypira maapuramaeviya pemmaanivanan'rae.


புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. ...... 1.1.10

puththaroadupo'ri yilsama'numpu'rang koo'ra:ne'ri:nillaa
oththasollavula kampalithaer:nthena thu'l'langkavarka'lvan
maththayaanaima'ru kavvuripoarththathoar maayammithuvennap
piththarpoalumpira maapuramaeviya pemmaanivanan'rae.


அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே.. ...... 1.1.11

aru:ne'riyama'rai vallamuniyakan poykaiyalarmaeya
peru:ne'riyapira maapuramaeviya pemmaanivan'rannai
oru:ne'riyamanam vaiththu'nargnaanasam pa:nthannuraiseytha
thiru:ne'riyathamizh vallavartholvinai theerthale'lithaamae.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.