Airtel re-launches Rs 100 and Rs 500 prepaid plans
Commerce

Airtel Rs. 100, Rs. 500 Recharge Plans Re-Introduced With 28 Days Validity

இந்திய டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்களிடையே போட்டி நிலவிக்கொண்டே இருக்கும்.வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள பல புதிய திட்டங்களையும் பல சலுகைகளையும் அவ்வப்போது இந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஜியோவின் ப்ரீபெய்ட் பிளானுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தனது புதிய ரூ.100 மற்றும் ரூ.500 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ரீசார்ஜ் பிளான் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அதிகப்படியான டாக் டைம் சேவையைப் பயனர்களுக்கு வழங்குகிறது.

புது ஏர்டெல் ரூ.100 ரீசார்ஜ் பிளான் ஆனது அதிக டாக் டைம் பயன்படுத்தும் பயனருக்காக பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏர்டெல் பிளான் பயனருக்கு ரூ.81.75 டாக் டைம் சேவையை 28 நாட்களுக்கு வழங்குகிறது. அதுபோல புதிய ஏர்டெல் ரூ.500 பிளான் ஆனது ரூ.420.73 டாக் டைம் சேவையை பயனருக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

ஏர்டெல்-இன் புது திட்டங்கள் இரண்டிலும் டேட்டா சேவை மற்றும் இலவச எஸ்.எம்.எஸ் கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு திட்டங்களுமே அதிக டாக் டைம் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.