நிழற்பட கருவி தயாரிப்பில் பெரும்பாலான‌ ஜப்பானிய‌ நிறுவனங்களே முதன்மை இடம் வகிக்கின்றன‌. கீழ்காணப்படும் DSLR வகை கேமரா தயாரிப்பாளர்கள் உலகளவில் மிகவும் பிரபலமான‌, தொழில்முறை(Professional Cameras) மற்றும் கச்சிதமான‌(Compact Camera) கேமிராக்களை (நிழற்பட கருவிகளை) தயாரித்து மக்கள் மனதினில் இடம்பெற்று பிரபலமடைந்த‌ தயாரிப்பாளர்கள் ஆகும்.

01

கெனான், CANON

தயாரிப்பாளர் இணையதளம்

கெனானின் கேமரா தயாரிப்புகளின் பெயர் பவர்ஷாட் (Powershot) மற்றும் ஐசஸ் (IXUS) ஆகும். ஜப்பானிய நிறுவனமான‌ கெனான் இன்க் ஜப்பானில் உள்ள டோக்கியோவை (Tokyo) தலைமையகமாகக் கொண்டு செயலாற்றும் பன்னாட்டு நிறுவனமாகும்.
02

நிக்கான், NIKON

தயாரிப்பாளர் இணையதளம்

நிக்கான் கேமரா தயாரிப்புகளின் பெயர் நிக்கான் 1 (Nikon 1) மற்றும் ஃகூல்பிக்ஸ் (COOLPIX) ஆகும். டோக்கியோவை(Tokyo) தலைமையமாகக் கொண்ட‌ ஜப்பானிய நிறுவனமான‌ நிக்கான், கேமரா, லென்சு, பைனாக்குலர், அளவீட்டுக் கருவிகள் ஆகியனவற்றைத் தயாரிக்கிறது.
03

சோனி, SONY

தயாரிப்பாளர் இணையதளம்

சோனியின் கேமரா தயாரிப்புகளின் பெயர் சைபர்‍- ஷாட் (Cyber-shot) ஆகும். சோனி கார்ப்பரேஷன் (Sony Corporation) ஜப்பான் நாட்டிலுள்ள டோக்கியோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் கணிணி ஊடக தயாரிப்புத் துறையிலும், மின்னணு சாதனங்கள் உற்பத்தியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
04

ஒலிம்பஸ், OLYMPUS

தயாரிப்பாளர் இணையதளம்

ஒலிம்பஸ் கேமரா தயாரிப்புகளின் பெயர் ஸ்டைலஸ் (STYLUS) ஆகும். டோக்கியோவை(Tokyo) தலைமையமாகக் கொண்ட‌ ஜப்பானிய நிறுவனமான‌ ஒலிம்பஸ் கார்ப்பரேஷன், ஒளியியல் மற்றும் தோற்றுரு வரைவியல்(reprography) பொருட்கள் ஆகியனவற்றைத் தயாரிக்கிறது.
05

ஃபானசோனிக், PANASONIC

தயாரிப்பாளர் இணையதளம்

ஃபானசோனிக் கேமரா தயாரிப்புகளின் பெயர் லுமிக்ஸ் (LUMIX) ஆகும். ஜப்பானிய நிறுவனமான‌ ஃபானசோனிக் கார்ப்பரேஷன் ஒசாக்காவை (Osaka) தலைமையகமாகக் கொண்ட‌ பன்னாட்டு மின்னணு நிறுவனமாகும்.
06

பென்டாக்ஸ், PENTAX

தயாரிப்பாளர் இணையதளம்

ரிக்கோ இமேஜிங் கம்பனி., லிட், கேமரா தயாரிப்புகளின் பெயர் பென்டாக்ஸ் (PENTAX) ஆகும். முன்ன,ர் அக்டோபர் 1, 2011ல், ரிக்கோ நிறுவனம் பென்டாக்ஸ் இமேஜிங் கார்ப். நிறுவனத்தினை வாங்கியது. பின்னர் பென்டாக்ஸ் ரிக்கோ இமேஜிங் கம்பனி., லிட் என‌ பெயரிடப்பட்டது. ஆகஸ்டு 1, 2013 அன்று ரிக்கோ இமேஜிங் கம்பனி., லிட் என‌ மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது
07

சேம்சங், SAMSUNG

தயாரிப்பாளர் இணையதளம்

சேம்சங் குரூப் (குழுமம்), தென்கொரியாவின், சியோலில் உள்ள சேம்சங் டவுனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள பன்னாட்டு குழும நிறுவனமாகும்.
08

கேசியோ, CASIO

தயாரிப்பாளர் இணையதளம்

கேசியோ கம்ப்யூட்டர் கோ., லிட், கேமரா தயாரிப்புகளின் பெயர் எஃக்ஸிலிம் (Exilim) ஆகும். ஜப்பானிய நிறுவனமான‌ கேசியோ கம்ப்யூட்டர் கோ., லிட், டோக்கியோவை(Tokyo) தலைமையகமாகக் கொண்ட‌ பன்னாட்டு மின்னணு நிறுவனமாகும்.
09

ரிக்கோ, RICOH

தயாரிப்பாளர் இணையதளம்

ரிக்கோ இமேஜிங் கம்பனி., லிட், கேமரா தயாரிப்புகளின் பெயர் பென்டாக்ஸ் (PENTAX) ஆகும். பென்டாக்ஸ் ரிக்கோ இமேஜிங் கம்பனி., லிட் , ஆகஸ்டு 1, 2013ல் ரிக்கோ இமேஜிங் கம்பனி., லிட் என‌ பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
10

ஃபூஜிபிலிம், FUJIFILM

தயாரிப்பாளர் இணையதளம்

ஃபூஜிபிலிம் கேமரா தயாரிப்புகளின் பெயர் ஃபைன் பிக்ஸ் (FINEPIX) ஆகும். ஜப்பானிய புகைப்படம் மற்றும் இமேஜிங் நிறுவனமான‌ ஃபூஜிபிலிம் ஹோல்டிங் கார்ப்பரேஷன் டோக்கியோவை(Tokyo) தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இப்பக்கத்தில் மேலே பயன்படுத்தப்பட்ட‌ நிறுவன‌த்தின் சின்னங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த‌ நிறுவனத்தின் தனிப்பட்ட சின்னம் அல்லது குறீயிடு வணிகச்சின்னம் அல்லது வர்த்தக்குறி (trademark) ஆகும். இப்பக்க‌த்தினில் குறிப்பிடப்பட்ட‌ அச்சின்னங்கள் இங்கு விளக்கத்திற்காக‌ மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.