kamudi-solar-power-plant, the worlds largest in single location (Kamuthi solar project)
Technology

World’s largest solar plant at Kamuthi in Ramanathapuram district of Tamil Nadu will produce 648MW of electricity.

இந்தியா, வரும் ஆண்டில், உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி உற்பத்தி (solar power produce) அட்டவணையில் மூன்றாவதாக‌ இடம்பெற‌ உள்ளது (சீனா, அமெரிக்கவை அடுத்து). தமிழ்நாட்டின் கமுதி பகுதியில், 648 மெகாவாட் மின் உற்பத்தி மற்றும் 10 சதுர கி.மீ பரப்பளவில் இந்த‌ சோலார் பவர் ஆலை (solar power plant) அமைந்துள்ளது.

அதானி குரூப் நிறுவனத்தால் (Adani Group) பணிசெய்து முடிக்கப்பட்ட‌ இந்த‌ கமுதி சூரிய மின்சக்தி ஆலையானது Rs.4,550 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

550 மெகாவாட் மின் உற்பத்தி கொண்ட கலிபோர்னியாவின் டோபாஸ் சூரியப் பண்ணையிடமிருந்து (Topaz Solar Farm, California) ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட‌ பெரிய சூரிய மின்சக்தி ஆலை ( largest solar power plant at a single location) என்ற‌ பெயரினை தட்டியெடுத்துள்ளது இந்த‌ கமுதி சூரிய‌ ஆலை (Kamuthi solar power plant).

கமுதி அமைவிடம் ?

கமுதி உண்மையில் கவின்மிகு முல்லைத் திருநகர் என்பதைக் குறிக்கிறது. கமுதி, தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். The solar power plant built in Kamuthi, Ramanathapuram, in Tamil Nadu makes it the largest solar power plant at a single location.

முழு உற்பத்தியுடன், சுமார் 150,000 வீடுகளுக்குக் போதுமான மின்சாரத்தை உற்பத்தி (produces electricity) செய்ய முடியும் என‌ மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் 2.5 மில்லியன் சூரிய பேனல்கள் ( 2.5 million individual solar modules), 576 இன்வெர்ட்டர்கள் (Inverters), 154 டிரான்ஸ்பார்மர்கள் (Transformers / மின்மாற்றிகள்), 6,000 கிலோமீட்டர் கேபிள்களைக் (Cables) கொண்டுள்ளது.

5000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட‌ கமுதி சூரிய மின்சக்தி ஆலை (Kamudi solar power plant), கமுதி 400 கே.வி. தமிழ்நாடு மின்சார வாரிய துணை மின் நிலையத்துடன் ( 400 KV sub-station of Tantransco/ Tamil Nadu Transmission Corporation) இணைக்கப்பட்டுள்ளது.

2022 இல், இந்தியா, சூரிய சக்தி மூலம் 60 மில்லியன் வீடுகளுக்கு மின் விநியோகம் எனும் குறிக்கோளைக் கொண்டுள்ளது. இது 2030 ஆம் ஆண்டு வாக்கில் படிமம் அல்லாத எரிபொருட்களில் (power from non-fossil fuels) இருந்து 40 சதவீதம் மின்சக்தியை தயாரிக்க வெண்டுமெனும் இந்திய‌ அரசாங்க இலக்கின் ஒரு பகுதியாகும்.