Matchpoint Remote Controlling Technology
Technology

Everyone should know about this Revolutionary' new gesture control tech which turns any object into a TV remote

'புரட்சிகரமான‌' புதிய சைகை கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் எந்த ஒரு பொருளையும் ரிமோட் கண்ட்ரோலராக‌ மாற்றிவிடும். ஆம் தினசரி பொருட்களை ரிமோட் கண்ட்ரோல்களாக மாற்றக்கூடிய புதிய சைகை கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் (gesture control technology), தொலைக்காட்சி மற்றும் பிற திரைகளை தொடர்புகொண்டு கட்டுப்படுத்தி இயக்கும் திறனை அளிக்கின்றது.

உங்கள் டீ கப்பினை நகர்த்துவதன் மூலம் உங்கள் டிவி சேனலை மாற்றுவதை கற்பனை செய்து பாருங்கள், ஒரு மியூசிக் பிளேயரில் வாலூமை/ music player's volume (சத்தம்) ஒரு பொம்மைக் காரினை உருட்டுவதன் மூலம் கண்ட்ரோல் செய்வது (control volume by rolling toy car), ஒரு அகன்ற‌ கரண்டியினை சுழற்றுவதனால் பிளேயரை பாஸ் (PAUSE) (இடைநிறுத்தம்) செய்வது பற்றி யோசித்திருப்பீர்களா. அட‌ டெக்னாலஜி பாஸ் டெக்னாலஜி. இது சாத்தியமாகின்றது விரைவில்.

ஆகா. ரிமோட் வைத்த‌ இடத்தினில் இருக்காதே, இது அனைவரின் வீட்டிலும் நிகழும் சம்பவம், சில‌ சமயம் நம் பேரக் குழந்தைகள், சில நேரங்களில் நாமே அவசரத்தினில் மறந்து வைத்துவிடுகின்றோம். ஆகா இன்று இந்த‌ புரோகிராமமைப் பார்த்து நேரத்தினை கழிக்கலாம் என்று கூட‌ தோன்றும். ஆனால் ரிமோர்ட் வைத்த இடத்தில் இருக்காது. அதனை தேடி அலையவேண்டி இருக்கும். என்ன‌ செய்வது. அப்படியிருக்கும் நிலைமை இப்போது. ஆனால் இது அனைத்தும் சிறிது காலத்தினில் மாற‌ உள்ளன‌.

ஆம். ஒரு எளிய வெப்கேம் (webcam/ webcamera) மட்டுமே தேவைப்படும் 'Matchpoint' தொழில்நுட்பம், திரையின் மூலையில் உள்ள சிறு வட்டவடிவ‌ விட்ஜெட்டில் சுற்றி நகரும் இலக்கின் அசைவினைக் காண்பித்து செயல்படுகின்றது.

இங்கிலாந்திலுள்ள லங்காஸ்டர் பல்கலைக்கழகத்திலிருந்து ( Lancaster university) உள்ள‌ ஆராய்ச்சியாளர்கள் ஒஇந்த தொழில்நுட்பத்தினை உருவாக்கி வருகின்றனர். இந்த‌ தொழில் நுட்பம் மூலம் உடல் இயக்கம் அல்லது பொம்மை / எந்த‌ ஒரு பொருட்களின் இயக்கத்தையும் கட்டுப்படுத்த‌ அனுமதிக்கிறது, இது திரைகளுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படுகிறது.