மேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு
The SPYNDI chair consists of 60 handmade wooden pieces, which can be attached to one another. Very flexible and very strong fitting is a design made after inspired by human spine.
லிதுவேனியன் வடிவமைப்பாளர் மைண்டாகஸ் சிலியோனைஸ் (Mindaugas Žilionis) ஒரு பல்வகைப் பயன்பாடுடைய நாற்காலி SPYNDI யை உருவாக்கியுள்ளார். கையால் வடிவமைக்கப்பட்ட 60 மர உறுப்புக்கள் (மரவேலை பணியப்பட்ட துண்டுகளைக்) கொண்டது SPYNDI நாற்காலி. இந்த 60 துண்டுகளைக்கொண்டு உங்களுக்குப் பிடித்தமான வடிவுடைய ஃபர்னிச்சரினை 15 நிமிடங்களில் அமைத்துக்கொள்ள முடியும். மனித முதுகெலும்பு போன்று அமைப்பினை உடைய மர உறுப்புக்களாலான இந்த நாற்காலி, மனித முதுகெலும்பினால் ஊக்குவிக்கப்பட்ட திட்டமாகும்.

மேஜிக் ஸ்டிக் சேர் என்று அறியப்படும் இந்த நாற்காலி வித்தியாசமான கோணத்தில் உருவாக்குவதற்கு காரணமாக இருப்பது இரு பக்கங்கள். A மற்றும் B பக்கங்கள். வளைவான பகுதியை அமைத்துக்கொள்ள A+A+A+A+... என சேர்க்க வேண்டும். நேரான பகுதியை அமைக்க A+B+A+B+A ..
SPYNDI ORIGINAL 45 நீளம் மற்றும் 15 (45+15=60) குறுகிய் குச்சிக்களை கொண்டது. SPYNDI ROYAL 60 நீளம் மற்றும் 15 (60+15=75) குறுகிய் குச்சிக்களை கொண்டது. எடை 40கிகி - 49 கிகி.
Images and videos are copyright of SPYNDI.
இதுபற்றிய பக்கம் | kickstarter.com |