ஸ்மார்ட் ஃபோன் கவர் ! காப்புகவசம் மட்டுமல்ல‌; அதுக்கும் மேல‌ செய்யும்!.

FlexCase being developed by the University of Applied Sciences Upper Austria and Microsoft makes smartphone's case a extended touch screen than just protecting the phone

ஆதாரம் யூடியூப் வீடியோ

Your Smartphone's Case can be a extended touch screen than just protecting

Whenever people buy a new smart phone we care for a protecting case (Mobile cover). The new different FlexCase being developed by the University of Applied Sciences Upper Austria and Microsoft gives you a different experience and features. When You open the Flexcase , it doubles as an extended touchscreen for your device which is flexible unique ways to interact with your phone.?

Uses can be explained as : We use two-fingers on-screen and pinch to zoom in on a map, but by using FlexCase users could simply bend the corner of the case's cover forward or back for quicker navigation. Piezoelectric circuitry inside the Flex Case cover detects touches, squeezes, swipes, and exactly how it's being bent or warped.

நாம் ஸ்மார்ட் ஃபோன் (Smart phone) வாங்கும்போது தவறாமல் அதற்கான‌ உறையினையும் (கவர்-cover) சேர்த்து வாங்கிக்கொள்கிறோம்.

ஃபோன் தவறாக‌ கீழே விழுந்தால் சிறிதாவது சேதப்படாமல் தப்பித்துக்கொள்ளுமே என்பதால் தான் ??

ஆனால் இனிமேல் இந்த‌ மொபைல் ஃபோன் உறையினை வேறொரு பயன்பாட்டிற்காக‌ மற்றொரு வடிவில் பார்க்கப் போகிறீர்கள்.

ஆம்

University of Applied Sciences Upper Austria மற்றும் மைக்ரோசாஃப்ட் (Microsoft) உருவாக்கும் ஃப்ளெக்ஸ் கேஸ் (FlexCase) தான் அது !

நீங்கள் ஃப்ளெக்ஸ் கேஸ் (FlexCase) பிளிப் கவரினை திறக்கும் போது உங்களது ஃபோன் திரை இருமடங்கானதுபோல் நீட்டிக்கப்பட்ட‌ தொடுதிரையினைப் (Touchscreen) போல‌ இடதுபுறம் அமைந்திருக்கும். மேலும் இந்த‌ கவர் பயன்படுத்தி உங்களது போன் ஆப்களை நிர்வகிக்க‌ முடியும். இருவிரல்களை உபயோகித்து மேப்பினை (Maps) பெரிதாய் காண உங்கள் ஃபோனை கிள்ளுவதற்கு பதிலாக‌ ஃப்ளெக்ஸ் கேஸ் (FlexCase) கவரின் மூலையினை முன்பக்கமோ அல்லது பின்பக்கமோ நெளித்தால் போதும். மேலும் பல‌ செயல்பாடுகளை இதனால் செய்ய‌ முடியும்.

உங்களது கைபேசியினை ஒரு புத்தகம் போல் இனி பயன்படுத்த முடியும். ஒரு பக்கம் பிளிப் கேசின் திரையிலும், அடுத்தபக்கம் உங்களது கைபேசித் திரையிலுமாகக் காணலாம். பக்கத்தினை திருப்பிக் கொள்ள‌ கவரின் மூலையினை நெளித்தால் போதும்.

இதுவரையிலும், ஃப்ளெக்ஸ் கேஸ் (FlexCase - Flip case) ஒரு ஆராய்ச்சி திட்டமாகவே உள்ளது. மே மாதம் நடைபெறும் கணினி மனித தொடர்பு மாநாட்டில்(Computer-Human Interaction conference) சமர்பிக்கப்படும். Piezoelectric circuit பயன்படுத்தும் இந்த‌ ஃப்ளெக்ஸ் கேஸ் (FlexCase - Flip cover) பின் தொழில்நுட்பம் பயன்படுத்தி, ஸ்மார்ட்போன் பாகங்கள் போலவே பயனுள்ள பொருளாக‌ நமது கைகளில் வந்து சேரும்.


நாள் : 22.04.2016 திருத்தம் : 22.04.2016

புதியவை / Recent Articles