கைபேசிகளில் "பீதி பட்டன்" அவசியமாக்கப் படுகிறது

Technology

From 2017, every mobile phones sold in India will have a Panic Button For Women's Safety

ஆதாரம் Reuters பக்கம்

India mandates all smartphones sold from 2017 must come with a panic button

According to the announcement from Ministry of Communications and Technology of India, from 2017, all devices sold in the country must have a built-in panic button, and GPS from 2018. As a initiative to promote women's safety through phone devices, an effective tool for self-protection, the government has said no such phone device will be sold from next year without a key as panic button that connects to the nearest redressal agency with a single push.

2017 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கைபேசிகளிலும் "பீதி பட்டன்" (panic button) அவசியம் இருக்க‌ வேண்டும். இதனால் கைபேசி பயனர்கள் (Mobile phone Users) உடனடியாக அவசர சேவைகளுக்கு விழிப்பூட்ட முடியும். பெண்கள் பாதுகாப்பினை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக இந்த‌ திட்டத்தினை, கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டெக்னாலஜி
அமைச்சகம் ( Ministry of Communications and Technology ) அறிவித்தது. மேலும் ஒரு வருடம் கழித்து விற்கப்படும் அனைத்து ஃபோன்களிலும் ஜிபிஎஸ் (GPS) கட்டாயமாக்கப்பட்டு அதிகாரிகள் விரைவில் பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் பொருட்டு தரநிலையாக்கப்படும்.
.

"தொழில்நுட்பம் முற்றிலுமாக‌ மனித வாழ்க்கையினை சிறப்பாக அமைத்துக்கொள்ளவே, மேலும் அத்னை பெண்களின் பாதுகாப்பிற்காக‌ பயன்படுத்துவதை விட சிறப்பானதாக‌ என்ன‌ இருக்க‌ முடியும்," என‌ இந்தியா தொலைத்தொடர்பு அமைச்சர் இரவி சங்கர் பிரசாத் (India's communications minister Ravi Shankar Prasad) கூறினார்.

ஃபோன்களின் 5 அல்லது 9 பொத்தானை நீண்ட நேரம் அழுத்தினால் நேராக போலீசுக்கு அழைப்பு (phone call) அனுப்பப்படும். ஸ்மார்ட்போன் பயனர்கள் (smartphone users ) மூன்று முறை மிக விரைவாக பவர் பொத்தானை அழுத்த‌ வேண்டும்.

அரசின் இந்த திட்டம் 2015 டிசம்பரில் மொபைல் போன் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டது. இந்த‌ புதிய விதிகள் உள் நாட்டு தயாரிப்பாள‌ர்களுக்கு மட்டுமல்லாது முன்னிலை ஸ்மார்ட் ஃபோன் (Smart phone) நிறுவனங்களான‌ ஆப்பிள் (Apple) மற்றும் சாம்சங் (Samsung) உள்ளிட்ட அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் பொருந்தும்.


நாள் : 27.04.2016 திருத்தம் : 27.04.2016

புதியவை / Recent Articles