photonic circuits
Technology

New Microchip development Converts Data Stored as Light Waves into Sound Waves

உலகிலேயே முதல் முறையாக ஒளியை ஒலி வடிவில் சேமிக்கும் விந்தையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், ஒளி அலைகளை ஒலி அலைகளாக‌ மாற்றியமைக்கக்கூடிய ஒரு மைக்ரோகிப்பை (Microchips Convert Data Stored as Light Waves into Sound Waves) வடிவமைத்திருக்கிறார்கள். இது ஒளித் தகவல்கள் சேமித்தலினை மிதமாகவும், செயல்திறன் மிக்கதாகவும் செயல்பட வைக்கிறது.

ஒளியிலிருந்து ஒலி மாற்ற செயல்முறை தகவல் சேமிப்பு மெதுவாக்கி, ஃபோட்டோனோனிக் சுற்றுகள் (photonic circuits) மூலம் தகவல் செமிக்கும் கையாள் திறனையும் எளிதாக்குகிறது. இது எலக்ட்ரான்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஒளியைப் பயன்படுத்தி தரவுகளை கட்டுப்படுத்துகிறது.

வழக்கமான‌ தொலைத்தொடர்பு மற்றும் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்குகளில் பயன்படுத்தப்படும் மின்னணு சாதனங்கள் அதிக வெப்பத்தை வெளியிடுவதால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை மற்றும் அதிக ஆற்றல் பயன்படுத்துகின்றன‌. மைக்ரோக்சிப்பின் மீது ஒளி மற்றும் ஒலி அலைகளை நிறுவுதல் இந்த சிக்கல்களை நீக்குகிறது - ஃபோட்டான்கள் மின்காந்தக் குறுக்கீட்டினை எதிர்த்து, வெப்பம் உருவாதலை தடுக்கின்றது.

ஆய்வுதனை வெற்றிகரமாக‌ நிறைவேற்றிய‌ விஞ்ஞானிகள் இதன் மூலம் ஒளியை ஒலி வடிவாகவும் ஒலியை ஒளி வடிவாகவும் மாற்றி கணினியின் சிப்பில் சேமித்து வைக்க முடியும் என்பதையும் அறிந்துள்ளனர். எதிர்காலத்தில் அதிவேக கணினிகளை வடிவமைக்க இத்தகைய‌ மைக்ரோ சிப்கள் உதவிபுரியும்.

இவ்வகை சிப்கள் பயன்படுத்துவதால் தற்போதைய கணினிகளை விட 20 மடங்கு அதிவேகமாக கணினிகள் இயங்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் மிகப்பெரியதாகவும் வேகமாகவும் பரிணாமம் பெற்று வருகின்றன‌, ஆனால் மேம்பட்ட சாதனங்களை உருவாக்கும் போது வெப்பத்தின் தாக்கமும் , சிஸ்டம் பராமரிப்பும் கடினமான காரியமாகிற‌து. ஆனால் ஃபோட்டோனோனிக் சிப்கள் photonic வெற்றிகரமான உருவாக்கம் பெற்றுள்ளதால், IBM மற்றும் இன்டெல் போன்ற பெரும் நிறுவனங்களை தங்கள் கணினிகளில் இத்தகைய சிப்களைப் பயன்படுத்துவதற்கான‌ சாத்தியங்களை ஆராயத் தூண்டியுள்ளது.