வெளியிட்ட தேதி : 06.01.2017
AI Robots In Action
Technology

Japanese insurance firm replaces 34 staffs with AI- Artificial Intelligence Robots

ஜப்பானிய‌ நிறுவனம் ஒன்று அதன் ஊழியர்கள்களுக்குப் பதிலாக செயற்கை அறிவுத்திறன் படைத்த‌ ரோபோக்களை வேலையில் அமர்த்தியுள்ளது (Japanese firm replaces staff with AI).

சில ஆண்டுகளுக்கு முன்வரை ரோபோக்கள‌ மனிதனின் வேலை வாய்ப்பினை பறித்துக்கொள்வதை ஒரு வீறுப்பான‌ அறிவியல் புனைகதையின் (science fiction) கதை திருப்பம் போன்றிருந்தது. ஆனால் உண்மையில் மனிதர்களிடமிருந்து வேலைகளை பறித்த‌ ரோபோக்கள் என்றொரு சூழ்நிலை ஜப்பானிய‌ காப்பீட்டு நிறுவனமான‌ ஃபுக்கோக்கு மியூட்சுயல் லைஃப் (Fukoku Mutual Life) ஊழியர்களுக்கு நேராக நிகழ்ந்துள்ளது.

நிறுவனத்தின் 30 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக‌ செயற்கை அறிவுதிறன் அமைப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து அதன் மூலம் (replace 30 employees with an artificial intelligence system) காப்பீடு இழப்பீட்டுத் தொகைகளை கணக்கிட நிர்வாக முடிவினை செய்துள்ளது என‌ பிபிசி தெரிவித்துள்ளது.

பின்னணி என்னவென்றால் ஃபுக்கோக்கு நிறுவனம் (Fukoku Mutual Life), AI உடன் மனித தொழிலாளர்களை மாற்றியமைப்பதனால் அதன் செலவுகளைக் சுமார் $ 1.2 மில்லியன் (அல்லது 140 மில்லியன் யென்) வரை கூடுதலாக சேமிக்க முடியும் என‌ எதிர்பார்க்கிறது.

ரோபோக்களை மனிதர்களுக்குப் பதிலாக‌ ஆதரிக்கும் நிறுவனம் ஃபுக்கோக்கு (Fukoku Mutual Life) மட்டுமல்ல‌ (company to entertain replacing humans with robots). குறைந்தது மூன்று ஏனைய‌ காப்பீட்டு நிறுவனங்களும் கணினிகளை ஆதரித்து தங்கள் ஊழியர்களை கைவிடுவது பற்றி யோசிக்கின்றன என‌ மைனிச்சி (Mainichi) எனும் ஜப்பானிய‌ செய்தி வெளியீடானது கூறுகின்றது.

என்னடா உலகமிது. மனிதன் இயந்திரமாய் வாழ்ந்த‌ காலம் மாறி மனித‌ வாழ்வினை அபகரித்துகொண்டு இயந்திரமே மனிதனாய் வாழும் காலம் விரைவில் அரங்கேறப்போகின்ற‌து !!!!.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.