அறிவியல்

A metal that behaves like water

ஆதாரம் அறிவியல் செய்தி வெளியீடு

உலகையே மாற்றப்போகும் கிராஃபீன் (Graphene ). ஒரு தசாப்தம் (10 வருடம்) முன்பு கண்டுபிடிக்கப்பட்டு, விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கிராஃபீனை (Graphene ), மின்னணு பொருட்களில் மிகுதியாக‌ காணப்படும் சிலிக்கானுக்கு மாற்று பொருளென‌ ஒரு அதிசய பொருளாகக் கண்டறிந்தனர்.

பேட்டரிகளின் திறனை அதிகரிக்கவும், தொடுதிரைகளின் ஆயுள் மற்றும் ஊடுகடத்தும் திறனை அதிகரிக்கவும் மற்றும் பல விஷயங்களை, மலிவான அனல் மின்னாற்றல் பெற‌ கிராஃபீன்(Graphene) வழி வகுக்கும்.

மனிதகுலத்திற்கு மெல்லிய பொருளாக‌ அறியப்படும் கிராஃபீன்(Graphene) நம்பமுடியாத வலுவானதாகவும் எஃகை (steel) விட 200 மடங்கு வலிமையானதாகவும் உள்ளது. இன்னும், கிராபீன் கிராஃபைட்டில் (சாதாரண பென்சில் ஈயம்) இருந்து தயாரிக்கப்படுகிறது. அது தடிமனான அணு கொண்டும், எஃகு விட வலுவானதகவும், வைரத்தைவிட‌ (diamond) கடினமானதாகவும், புவியில் அதிகூடிய கடத்தும் பொருட்களுள் (conductive materials) ஒன்றாக‌ உள்ளது.

இப்படி பல‌ சிறப்புமிக்க‌ கிரபேன் பொருட்கள் சந்தைக்கு வருவதற்கு முன் பல சவால்களை சந்திக்க‌ வேண்டியுள்ளது. விஞ்ஞானிகள் இன்னும் இந்த தனிப்பட்ட பொருளின் அடிப்படை இயற்பியலை புரிந்துக்கொள்ள முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும், கிராபீன் பொருட்களை ( graphene products) கடினமாக மற்றும் அசுத்தங்கள் இல்லாமலும் (without impurities)தயாரிக்க‌ மிகவும் சவாலாக‌ உள்ளது.

அறிவியல் பத்திரிக்கையொன்றில், ஹார்வர்ட் மற்றும் ரேய்த்தியான் BBN- ல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக ஒரு உலோகத்தின‌ எலக்ட்ரான்கள் திரவம் போல் நடந்து கொள்கிறது என‌ கண்டுபிடித்துள்ளனர். கிரபேன் பொருளின் அடிப்படை பண்புகளை புரிதலில் ஓரடி முன்னேறியுள்ளோம்.