கூஃகுள் பொறி கற்றல் பயன்படுத்தி படங்களைப் பெரிதுபடுத்தும் RAISR முறையை அறிவித்துள்ளது
நாம் இணையத்தில் பலவகையான வலைத்தளங்களில் குறைத்த படத் தெளிவுதனைக் கொண்ட படங்களைப் (low resolution images) பார்த்திருப்போம். இதன் காரணம் என்ன?.
கேமராவில் வரையறுக்கப்பட்ட பட அளவு (limited image resolution sizes) அல்லது மெதுவான இணைய இணைப்புகளில் (low-speed internet) வேகமாக படத்தை தோற்றுவிப்பதற்காக (load images faster) எனும் நோக்கத்துடனேயே படத்தின் தரம் / தெளிவு குறைக்கப்படுகிறது.
.
துரதிருஷ்டவசமாக, ஒரு படத்தை மிகத் தெளிவாக சிதை படாமல் பல முறை போதுமான அளவிற்கு பெரிதாக்குவது (enlarging images with preserving detail) என்பது இயலாத காரியமாகும். ஆனால் கூஃகுளின் பொறிக்கற்றல் (Google's Machine learning) இதற்கான தீர்வினைக் கொண்டுவந்துள்ளது.
RAISR என்பது Rapid and Accurate Image Super-Resolution என்பதன் சுருக்கமாகும். இதனால் விரைவாக மற்றும் துல்லியமாக ஒரு படத்தை சூப்பர்-தெளிவுடன் பார்க்க (மாற்ற) முடியும்.
தற்போதுள்ள (ஒரு சிறிய படத்தினை பெரிய படமாக்கும்) முறைகள், படத்தில் சுற்றியுள்ள பிக்சல்களில் இருந்து விபரங்களைப்பெற்று (get details from surrounding pixels in a image) அதற்கேற்ப படத்தினை நிரப்பும் எளிய வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. இந்த முறையில் உருவாக்கப்படும் பெரிய படமானது அசல் படத்தை விட தரம் இழந்து மங்கலான (created images by up scaling are blurry) தோற்றமளிக்கும்.
இங்குதான் கூஃகுளின் மந்திரமான RAISR வேலை செய்கின்றது. இதற்காக, கூஃகுள் 10,000 ஜோடி படங்களை (ஒரு குறைந்த தரம் low-resolution, ஒரு உயர் தரம் high-resolution ) கொண்டு படத்திற்கான துல்லியம் மற்றும் தெளிவினை ஏற்படுத்தும் வடிகட்டிகளை (ஃபில்டர்) உருவாக்குவதற்கு RAISRக்கு பயிற்சி அளித்தது.
கூஃகிள் RAISR பயன்படுத்தி குறைந்த-ரெஸலூஷன் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை மீட்டமைக்க (Can restore images captured by low-resolution cameras) முடியும் எனவும், மொபைல் சாதனங்களில் சிறிய படங்களை ஜூம் (zoom images in mobile devices) செய்து பெரிதுபடுத்தி பார்க்கவும் முடியும் ; மேலும் குறைவான மொபைல் டேட்டா உபயோகத்திற்காக (Low data usage) சிறிய படங்களை பயன்படுத்தி பெறுநர் இறுதியில் அவற்றை (upsampling at recipient's end) பெரிதுபடுத்த முடியும் என நம்புகின்றது.