வெளியிட்ட தேதி : 07.08.2017
Flatscope-developed-by-rice-university
Technology

FlatScope is being Developed by Rice University to Restore Eyesight

பெரும்பாலான மக்கள் மருத்துவர்களின் உதவியினை நாடுகின்றனர். பின் அறுவை சிகிட்சை மேற்கொண்டு தங்களது காதுகள் கேட்கவும் மற்றும் கண் பார்வையினை மீட்கவும் உதவி பெறுகின்றனர். ஆனால், ரைஸ் பல்கலைக்கழகம் ( Rice University) மூளைக்கு தகவல் பரிமாற்றும் செய்யும் ஒரு புதிய வழியினை கண்டுபிடித்துள்ளது.

எலக்ட்ரானிக் நுண்ணோக்கி வகையை சேர்ந்த பிளாட்ஸ்கோப் (FlatScope), தட்டையான‌ மைக்ரோஸ்கோப் போல் காட்சியளிக்கும். பிளாட்ஸ்கோப் உதவியுடன் இழந்த கண்பார்வையை மீட்க முடியும் எனவும் கேளாத‌ காதுகளை கேட்க‌ வைக்கவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிளாட்ஸ்கோப் , மூளையின் மேற்பரப்பில் உள்ள நியூரோன்களை தூண்டுவதுடன் ( trigger neurons), சமிக்ஞைகளை குறிமாற்றம் (Decoding) செய்கின்றது. இதன் காரணமாக பார்வை மற்றும் ஒலி தொடர்பான சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்ப புதுமையான‌ மாற்று வழி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.