Diamond battery made from nuclear waste
Technology

Diamond battery made from nuclear waste could last more than 5,000 Years

மனிதனால் தயாரிக்கப்பட்ட வைரத்திலிருந்து வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய பேட்டரியானது 5,000 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் என‌ ஆராய்ச்சியின்படி அறியப்படுகின்றது. அணுசக்தி கழிவுகளை மாற்றுவதன் மூலம் விஞ்ஞானிகள் கதிரியக்க டயமண்ட் பேட்டரிகளைத் தயாரித்துள்ளனர்.

வருங்கால‌ பேட்டரிகள் ?? ?

விஞ்ஞானிகள் 5700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத பேட்ட‌ரியை கண்டறிந்துள்ளனர். வருங்கால‌ செல்போன்கள் இந்த‌ செயற்கை வைரம் சம்பந்தமான‌ பேட்டரிகள் ஆகக்கூடும்.

அதிக நேரம் நம்பகமாக‌ மின்னூட்டம் பெற்று இயக்கப்பட‌ வேண்டிய‌ பேஸ்மேக்கர்கள், ட்ரோன்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்கள் (for powering pacemakers, drones, satellites and spacecraft) இயக்குவதற்கு இந்த‌ வகை பேட்டரிகள் ஏற்றதாக இருக்கும்.

இவ்வகை பேட்டரிகளின் தயாரிப்பதனால், அணுசக்தி கழிவுகளின் பிரச்ச்சனக்கான‌ தீர்வு , மின்சாரம் மற்றும் பேட்டரி ஆயுள் போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் வழிசெய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களுள் பெரும்பாலாவை , மின்னோட்டத்தை உருவாக்க ஒரு கம்பி சுருள் வழியாக காந்தசக்தி ஆற்றல் பயன்படுத்துபவை. ஆனால் மனிதனால் தயாரிக்கப்பட்ட வைரம் ஒரு கதிரியக்க மூலத்திற்கு அருகாமையில் வைக்கப்படுவதன் மூலம் மின்சாரத்தை உருவாக்குகிறது.

' நகரும் பகுதிகளற்ற‌, உமிழ்வுகள் இல்லாத‌ மற்றும் பராமரிப்பு தேவைப்படாமல், நேரடியாக மின்சாரம் தயாரிப்பது,' என்று பிரிஸ்டல்' இன் இன்டர்ஃபேஸ் அனாலிசிஸ் மையத்தில் ( University of Bristol's Interface Analysis Centre ) உள்ள பேராசிரியர் டாம் ஸ்க்ட் கூறியுள்ளார்.