ப்ளூடூத் 5 அறிமுகம் ; அதிக‌ சக்தி வாய்ந்தது

Bluetooth Special Interest Group (Bluetooth SIG) has revealed the much-improved Bluetooth 5 technology. Expect products equipped with Bluetooth 5 early next year.

ப்ளூடூத் 5 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பை விடவும் பல‌ மடங்கு அதிகமாக‌ சக்தி பெற்றதால் பவர்ஃபுல் பலன் தரக்கூடியது. புளுடூத் சிறப்பார்வக் குழுவின் (Bluetooth Special Interest Group (Bluetooth SIG)) கடந்த‌ ஜூன் மாத அறிவிப்பை தொடர்ந்து, இன்று மிகவும் மேம்பட்ட ப்ளூடூத் 5 தொழில்நுட்பத்தின் விவரக்குறிப்பானது இறுதி வடிவம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள‌ உற்பத்தியாளர்கள் அனைவரும் ஏற்க தயாராக ப்ளூடூத் 5 தொழில்நுட்பம் உள்ளது எனவும் Bluetooth SIG தெரிவுப்படுத்தியது.

ப்ளூடூத் 5 ஆனது இதற்கு முன் வெளிவந்த‌ ப்ளூடூத் 4.2 வினைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக‌ பேண்ட்விட்த் (வேகம் கூடிய), நான்கு மடங்கு எட்டும் தூரம் (பரவக்கூடிய‌ எல்லை) மற்றும் எட்டு மடங்கு தூரத்திற்கு தரவுகளைப் பரிமாற்றம் செய்யும் ஆற்றலையும் வழங்கும்.

குறைந்த தொலைவிலுள்ள நிலையான அல்லது மொபைல் சாதனங்களிடையே வயர்லெஸ் (கம்பியில்லா) தரவைப் பரிமாறிக்கொள்ள உதவும் புளூடூத் (Bluetooth), மொபைல் சாதனங்கள், லேப்டாப், கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற தொழில்நுட்பம் ஆகும். இதுவரையிலும் Bluetooth 1.0 and 1.0B ,Bluetooth 1.1, Bluetooth 1.2,
Bluetooth 2.0 + EDR, Bluetooth 2.1 + EDR, Bluetooth 3.0 + HS, Bluetooth 4.0 + LE, Bluetooth 4.1, Bluetooth 4.2 என‌ தொழில்நுட்பங்களாய் வெளிவந்த‌ புளுடூத் தற்போது Bluetooth 5 என‌ அறிமுகமாக‌ உள்ளது.

தற்போதைய ப்ளூடூத் 4.2 தரமானது ஒரு வீடு முழுவதும் வ‌யர்லெஸ் ஆல் இணைக்க போதுமான சக்தி பெற்றத‌ல்ல. அநேகமாக ப்ளூடூத் 5, ஸ்மார்ட் உபகரணங்கள் மற்றும் இணைப்பு பொருட்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து இதனை ஈடுகட்டக்கூடும்.

மேலும் வெளிப்புறங்கள், தொழில்துறை, மற்றும் வணிக பயன்பாடுகளுக்கும், முழு வீடு மற்றும் கட்டடத்தின் இணைப்புகளும் நிறைவேறும். ப்ளூடூத் 5 அறிமுகத்துடன், நாங்கள் இணைய‌ உலக டெவலப்பர்கள் (IoT developers) மற்றும் நுகர்வோர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எங்க‌ளை உருவாக்கிக் கொண்டுள்ளோம் என‌ SIG, நிர்வாக இயக்குனர் மார்க் பவல் கூறுகிறார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ப்ளூடூத் 5 பொருத்தப்பட்ட பொருட்கள் வெளிவரலாம் என‌ SIG எதிர்பார்க்கின்றது.

நாள் : 10.12.2016 திருத்தம் : 10.12.2016

புதியவை / Recent Articles