audi-lunar-quattro-lunar
Automobiles & Technology

The Audi lunar quattro moon rover incorporates Audi's e-tron power technology to provide intelligent all-wheel-drive powe

முன்னணி கார் வடிவமைப்பு நிறுவனமான‌ அவ்டி (Audi) இப்போது விண்வெளியிலும் காலடி வைக்க தயாராகிவிட்டது. அவ்டி நிறுவனம் சந்திரனை வலம்வரும் மூன் ரோவர் (Audi Lunar Quattro Rover ) ஒன்றை வடிவமைத்துள்ளது. இதற்காக 2015 ஆம் ஆண்டில் அவ்டி ஆளில்லா Audi Lunar Quattro Rover ஐ உருவாக்க ஜெர்மனியின் விஞ்ஞானி குழுவுடன் இணைந்து செயல்பட்டது.
தற்போது இதன் வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் சந்திரனை நோக்கி பயணிக்கவுள்ளது.

இந்த‌ சந்திரவல‌ வாகனத்தின் (lunar rovers) பல‌ பகுதிகளும் அலுமினியத்தால் செய்யப்பட்டவை (Aluminium Parts) மற்றும் சூரிய சக்தி தகடுகள் லித்தியம் அயன் பேட்டரிகளை சார்ஜ் செய்து அதன் ரோவர் சக்கரங்களை இயக்க‌ வைக்கின்றது. 3டி பிரிண்டிங் (3D Printing technology) முறையில் சில‌ பகுதிகளும் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ளதனால் 38 கிலோகிராம் எடை கொண்ட மூன் ரோவர் 30 கிலோகிராமாக குறைக்கப்பட்டுள்ளது.

நான்கு சக்கரம் கொண்ட‌ அவ்டி மூன் ரோவர் தயாரிப்பானது நிறுவனத்தின் நான்கு வளையங்கள் சின்னத்தினைக் கொண்டுள்ளது. Google Lunar XPrize எனும் போட்டியில் பங்குபெற்ற‌ ஜெர்மனைச் சார்ந்த‌ Part-Time Scientists (PTS) விஞ்ஞானிகள் இந்த‌ இயந்திரம் உருவாக்க வேலை செய்துள்ளனர். இது சந்திரனில் பயணிக்கும்போது தடம்புரளாமல் இருப்பதற்காகவும் விசேஷமாக‌ வடிவமைக்கப்பட்டுள்ளது.