வெளியிட்ட தேதி : 24.11.2016

AI Robots : Will sci-fi bots write the next great dystopian novel

மனிதனால் உருவாக்கப்பட்ட‌ மனிதன் !! : இந்த‌ ரோபோ மனித‌ மூளைக்குச் சமமான‌ செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) கொண்டது. மனிதனின் மூளைக்கு நிகரான‌ இந்த‌ அறிவார்ந்த AI ரோபோக்கள் அடுத்து வரும் அறிவியல்-புனைவு நாவலை எழுதக்கூடுமோ?

ஒரு நாள், AI ரோபோக்கள், பெருமளவிலான‌ மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்களை ஒட்டுமொத்தமாக எழுதக் கூடும். நாம் எழுதுவதைப் பின்பற்றுவதற்கு நம் மூளையை ஒத்திருக்கும் நரம்பியல் வலையமைப்புகளை (Neural Networks) AI ரோபோக்கள் பயன்படுத்திக் கொள்ளும். விஞ்ஞானிகள் நரம்பியல் வலையமைப்புகளுக்கு பெரிய‌ கட்டுரைகளை புரிந்துகொள்ளும் பயிற்சியினை அளித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த‌ நிகழ்வில், ஒரு ரோபோ அறிவியல் புனைகதை (Science Fiction Novel) ஒன்றையும் எழுதி காண்பித்தது.

AI ரோபோ என அழைக்கப்படும் இந்த இயந்திர மனிதன் (Human Like Robot), 24 மணிநேரமும் எந்த தடையுமின்றி நூல்களை எழுதும் திறன்படைத்தது. ஆசிரியர், தொழில்நுட்ப வல்லுனர் ராபின் ஸ்லோன் (Robin Sloan) இந்த இயந்திர மனிதனை உருவாக்கியுள்ளார்.

கலிபோர்னியாவின் ஓக்லாண்ட்டில் நடந்த‌ "Real Future Fair" கண்காட்சியில் பேசிய Mr. Penumbra's 24-Hour Bookstore புத்தகத்தின் ஆசிரியரான‌ ராபின் ஸ்லோன் இந்த‌ ரோ பாட்டை காட்சிப்படுத்தினார்.

1960 மற்றும் 1970 களில் வெளியான‌ அறிவியல்-சார் இதழ்கள் (Sci-Fi Magazines) பலவற்றை இந்த‌ எழுதும் திறன்கொண்ட‌ ரோபாட்டிற்கு புகட்டியுள்ளார். இதையடுத்து பழையகால‌ கதை எழுதும் பாணியை கற்றுகொண்டு கதை எழுதவும் செய்தது.

மனித மூளையின் பாகங்கள் போலவே, நரம்பியல் வலையமைப்புகளை பயன்படுத்தி 'ஆழமாக‌ கற்கும் (Deep Learning)' திறன் கொண்டவை AI ரோபோக்கள். நீங்கள் விக்கீப்பிடியாவோ அல்லது மகாபாரதமோ இதற்கு புகட்டினால் அதனை எளிதில் neural network இல் எடுத்துக்கொண்டு எழுதவும் செய்துகொள்ளும் என்கிறார் ராபின் ஸ்லோன்.

எதிர்கால வரலாற்றில், உலகில் பல‌ நாவல்களை இந்த‌ AI ரோபோக்கள் வெளியிடும் எனக் கூறப்படுகிறது. AI ரோபோக்கள் மனிதர்களுக்குக் கடும் சவாலாக அமையலாம்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.