அழைக்கிறார் அழைக்கிறார் இதோ நீயும் வா உந்தன் நேசர் கிறிஸ்தவ கீர்த்தனைப் பாடல் வரிகள். வரிகள். Azhaikirar Azhaikirar Itho neeyum vaa Christian tamil keerthanai songs lyrics
அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ
1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில் கண் கொள்ளாத காட்சியே
கண்டிடும் வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும்
2. நோயை ஏற்றவர் பேயை வென்றவர்
நீதிபரன் உன்நோயை நிச்சயமாய்த் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார்
3. துன்பம் சகித்தவர் துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே அண்ணல் இயேசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே துரிதமாய் நீ வாராயோ
4. கல்லறை திறக்க காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே
5. சாந்த சொரூபனே சத்திய வாசனே
வஞ்சமற்ற வாயனே வந்தழைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே தந்துன்னை அழைக்கிறார்
உங்கள் கருத்து : comment