அரசனைக் காணாமலிருப்போமோ?

வெளியிட்ட தேதி : 02.10.2018

அரசனைக் காணமலிருப்போமோ? - நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ? பாடல் வரிகள். Arasanai Kanamal iruppoma song Tamil Lyrics. Christian Keerthanai Songs / Tamil Worship Songs Lyrics.

:பல்லவி

அரசனைக் காணமலிருப்போமோ? - நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ?

:அனுபல்லவி

பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? - யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ? - யூத

:சரணங்கள்

01

யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! - யூத --- அரசனை

02

தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! - மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! - யூத --- அரசனை

03

அலங்காரமனை யொன்று தோணுது பார்! - அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! - நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! - யூத --- அரசனை

04

அரமனையில் அவரைக் காணோமே! - அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, - பெத்லேம்
வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! - யூத --- அரசனை

05

பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, - ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், - தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல், - யூத --- அரசனை

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.