சரணம் சரணம் கணபதியே சக்தியின் மைந்தா கணபதியே - பிள்ளையார் / கணபதி பஜனை பாடல் வரிகள்.Saranam Saranam Ganapathiye Saktiyin Mainthaa Ganapathiye song lyrics tamil
சரணம் சரணம் கணபதியே
சக்தியின் மைந்தா கணபதியே
வரணும் வரணும் கணபதியே
வந்தே அருள்வாய் கணபதியே
அன்பே சிவமே கணபதியே
அருளும் தருவாய் கணபதியே
இன்னல் நீக்கும் கணபதியே
இன்பச் சோதியே கணபதியே
கண்ணே மணியே கணபதியே
கவலை நீக்கும் கணபதியே
பொன்னே மணியே கணபதியே
பொருளும் தருவாய் கணபதியே
ஆவணித் திங்கள் கணபதியே
அடியேன் தொழுதேன் கணபதியே
சேவடிப் பணிந்தேன் கணபதியே
செல்வம் தருவாய் கணபதியே