திருவெம்பாவை பாடல் 06 : மானேநீ நென்னலை நாளைவந்து மற்றும் திருப்பாவை பாடல் 06: புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில் பாடல்களைப் பார்ப்போம்.

மார்கழி ஆறு. "மானேநீ நென்னலை நாளைவந்து" என்கின்ற‌ திருவெம்பாவையின் பாடல் மற்றும் "புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்" என்கின்ற‌ திருப்பாவை ஆறாம் பாடல்களைப் பார்ப்போம்.

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் - 6

மார்கழி ஆறு. "மானேநீ நென்னலை நாளைவந் துங்களை" என்கின்ற‌ திருவெம்பாவையின் மற்றும் "புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்" என்கின்ற‌ திருப்பாவை நான்காம் பாடல்களைப் பார்ப்போம்.

திருப்பாவை பாடல்கள் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான‌ கோதை என்ற ஆண்டாள் பாடிய‌ பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். மார்கழி மாதத்தில், இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் சேர்த்து பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள்.

திருவெம்பாவை பாடல் - 6

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.

விளக்கம்:
பெண்ணே! நீ, நேற்று, நாளைக்கு வந்து உம்மை எழுப்புவேன் என்று சொன்ன சொல்லுக்கும், வெட்கப்படாமல், நீ போன திக்கைச் சொல்வாய். இன்னும் பொழுது விடியவில்லையோ?. வானுலகத்தவரும், நிலவுலகத்தவரும், பிறவுலகத்தவரும், அறிதற்கு அருமையானவன் தானாகவே வலிய வந்து எம்மைக் காத்து அடிமை கொண்டருளுகின்ற மேலாகிய, நெடிய கழலணிந்த திருவடியைப் பாடி, வந்தவர்களாகிய எங்களுக்கு, நீ, உன் வாய் திறவாது இருக் கின்றாய். உடலும் உருகப் பெறாது இருக்கின்றாய். இவ்வொழுக்கும் உனக்குத்தான் பொருந்தும். எமக்கும் பிறர்க்கும் தலைவனாய் இருப் பவனை எழுந்து வந்து பாடுவாயாக!

திருப்பாவை பாடல் - 6

புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

விளக்கம்: காலையில் பறவைகள் கூவி விட்டன.கருடனை வாகனமாகக் கொண்ட பெருமாளின் கோயிலில் வெள்ளை சங்கு பெரிய ஓசை எழுப்பி அழைப்பது கேட்கவில்லையா ?
இளம் பெண்ணே !எழுந்திரு. பூதனை எனும் அரக்கியிடம் விஷமாகிய பாலை உண்டு அவளை மாய்த்தவனை, வஞ்சகமாக வண்டிச் சக்கரம் உருவில் சகடாசுரன் வந்த போது, தன் காலால் உதைத்து,அதன் உருவம் குலையும்படி நொறுக்கி அழித்தவனை,
பாற்கடலில் வெள்ளை பாம்பான ஆதிசேஷன் மேல் துயில் கொண்டிருக்கும்,உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை, முனிவர்களும்,யோகிகளும்,”ஹரி !ஹரி !”, என்று கூறும் ஒலியை உள்ளம் குளிரும் வண்ணம் கேட்டு,நினைவில் நிறுத்திக்கொள் பெண்ணே !

Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment