Tiangong-1-Made-in-China-space-station
Technology

Tiangong-1, Chinese space station could crash into Earth with its orbit been decaying since March 2016

தியேன்குங்-1 (Tiangong-1), 8.5-டன் சீன விண்வெளி நிலையம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் பூமியில் மோத உள்ளதாக‌ ( (Tiangong-1 Crash into earth) விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். 2016 ம் ஆண்டு முதல் தியேன்குங்-1 இன் சுற்றுப்பாதை வீழ்ச்சியடைந்து விட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். எனவே அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பூமியின் வளிமண்டலத்தில் தியேன்குங்-1 மீண்டும் நுழையலாம் (Tiangong-1 re-enter the Earth's atmosphere) என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயார்க், டோக்கியோ, பெய்ஜிங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சாத்தியமான விபத்து தளங்களைத் தேடி வருகிறது.
43 டிகிரி வடக்கு மற்றும் 43 டிகிரி தெற்கிற்கு இடையில் கழிவுகள் விழக்கூடும். இஸ்தான்புல், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் இத்தாலி, போர்ச்சுகல், பல்கேரியா, கிரீஸ் போன்ற நாடுகளிலும் சீன விண்வெளி நிலையத்தின் சிதைவுகள் விழக்கூடும் என‌ ஐரோப்பிய விண்வெளி முகமை தெரிவித்துள்ளது.

எனினும் குறிப்பாக எப்பகுதிகளில் விழக்கூடும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. குறிப்பிட்ட‌ இடத்தினை தியேன்குங்-1 பூமியின் வளிமண்டலத்தில் வெடிப்பதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பு தான் யூகிக்க முடியும் என‌ ஐரோப்பிய விண்வெளி முகமை (European Space Agency) தெரிவித்துள்ளது.