Transiting Exoplanet Survey Satellite (TESS)
Technology

NASA's TESS Just Found Its 1st Alien World — an Evaporating 'Super-Earth'

நாசாவின் புதிய கிரக வேட்டை மிஷன் (planet-hunting mission) ஆனது முதல் வேற்றுலக உலகத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த‌ "சூப்பர் எர்த்", அதன் நட்சத்திரத்திலிருந்து வெளியாகும் வெப்பத்தினால் ஆவியாகின்றது, என‌ ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

நாசாவின் செயற்கைக்கோளான‌ - Transiting Exoplanet Survey Satellite (TESS) மூலமாகவே இந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. TESS, ஏப்ரல் 18 அன்று SpaceX Falcon 9 ராக்கெட்டால் பூமியின் சுற்றுப்பாதையில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பூமியிலிருந்து 59.5 ஒளியாண்டுகள் (59.5 light-years) தொலைவில் கிட்டத்தட்ட பூமியை விட‌ 2.14 பருமனும் 4.82 எடையும் (2.14 times Earth's diameter and 4.82 times Earth's mass) கொண்டுள்ளது என‌ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக் கோளானது பி மென்செ (Pi Mensae) எனப்படும் அதன் நட்சத்திரத்தை சுற்றிவருவதாக தெருவிக்கப்படுகிறது. பி மென்செ சூரியனைப் போன்ற மஞ்சள் நிற‌ நட்சத்திரமாகும். இக்கோளானது வெறும் 6.27 நாட்களில் அதன் நட்சத்திரத்தை சுற்றிவருவதாக தெருவிக்கப்படுகிறது.