வெளியிட்ட தேதி : 03.01.2017
PSLV Rocket Launching
Technology

ISRO will make a new Guinness world record in January after lifting 83 satellites in one go using PSLV-C37

இஸ்ரோ, ஜனவரி மாத‌ இறுதியில் அதன் சிறப்புவாய்ந்த‌ பி.எஸ்.எல்.வி C37 பயன்படுத்தி ஒரே பயணத்தில் 83 செயற்கைக்கோள்களை செலுத்தி ஒரு மாபெரும் உலக‌ சாதனை செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.

இதற்காக‌ இஸ்ரோ தயாரித்துள்ள பி.எஸ்.எல்.வி. சி-37 ஏவுகணை விண்ணில் செலுத்த தயாராகி வருகின்றது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி என் இருவகை ராக்கேட்டுகளை பயன்படுத்தி செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி இஸ்ரோ நிறுவனம் வணிகரீதியாக‌ வெளிநாட்டு ராக்கெட்டுகளையும் விண்ணில் செலுத்தி வருகிறது என்பதும் அறிந்த‌ செய்தியே.

இந்நிலையில், தற்போது 83 செயற்கை கோள்களை ஒரே ராக்கெட்டில் (பி.எஸ்.எல்.வி. சி-37) பொருத்தி விண்ணில் செலுத்த திட்டமிட்டு தயாராகி வருகின்றது. வேறு எந்த விண்வெளி நிறுவனம் ஒரே நேரத்தில் 83 செயற்கைக்கோள்களை செலுத்தியதில்லை. பி.எஸ்.எல்.வி. சி-37 இராக்கெட்டில் பொருத்தப்படும் செயற்கை கோள்கள் அனைத்தும் நானோ வகையைச் சேர்ந்தவையாகும்.

இஸ்ரோவால் அனுப்பப்படும் செயற்கைகோள்களில், மூன்று இந்திய செயற்கைக்கோள்கள் மற்றும் 80 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் என‌ எண்ணத்தில் உள்ளன‌.

80 வெளிநாட்டு செயற்கைக்கோள் ஆவன‌, இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிச்சர்லாந்து மற்றும் அமெரிக்கா சேர்ந்தவை. வெளிநாட்டு செயற்கைக்கோள்களின் கூட்டு எடையானது கிட்டத்தட்ட 500 கி.கி இருக்கும். மூன்று இந்திய செயற்கைக்கோள்களில் Cartosat-2 தொடர் செயற்கைக்கோள் முதனமைச் சுமையாக‌ 730 கிலோ எடையும், ஐஎன்எஸ்-ஐ.ஏ மற்றும் ஐஎன்எஸ்-1B சேர்த்து 30 கிலோ எடையுள்ளதுமாக‌ உள்ளன.

இதுநாள் வரை, இஸ்ரோ 50க்கும் மேல் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது. ஒரே பயணத்தில் 80 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவ உள்ள‌ இந்திய விண்வெளி நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான‌ வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவி தனது சொந்த சாதனையை மேம்படுத்த உள்ளது. மேலும், இந்திய விண்வெளி நிறுவனம் வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் ஏவுகின்ற‌ எண்ணிக்கைப் பட்டியலில் சதம் அடிக்கவும் உள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.