Astronaut Peggy Whitson
Technology

Astronaut Peggy Whitson makes record for longest time spent in space

விண்வெளி வீராங்கனை பெக்கி விட்ச‌ன்(Astronaut Peggy Whitson) விண்வெளியில் நீண்ட‌ நாள் செலவிட்ட‌ பெண் எனும் சாதனையினை படைத்த‌ பின்னை பூமிக்கு வந்து சேர்ந்தார். இதுவரை விண்வெளிக்கு இவர் பிரயாணித்தவற்றைச் மொத்தமாகச் சேர்த்து : 665 நாட்களை விண்வெளியில் கழித்துள்ளார். இச்சாதனையானது அமெரிக்காவில் யாராலும், உலகில் வேறெந்த‌ பெண்ணாலும் நிகழ்த்த‌ முடியாத‌ ஒரு உலகச் சாதனையாகும்

சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் பெண் தளபதியான பெக்கி விட்சன் இன்று காலை கஸக்கஸ்தானின் ரஷ்ய விண்வெளி அமைப்பை வந்தடைந்தார். 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் சார்வில் பெக்கி விட்சனின் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார்.

57 வயதான‌ பெக்கி விட்சன் உலகின் பழமையான விண்வெளிப்பெண் மற்றும் 10 முறை விண்ணிற்கு பிரயாணித்த‌ அனுபவம் வாய்ந்த பெண் spacewalker ஆவார் எனும் மற்றொரு சாதனையினையும் படைத்துள்ளார். இவரது சமீபத்திய 288 நாள் பணியில் ( latest 288-day mission), விட்சன் 122.2 மில்லியன் மைல்கள் மற்றும் 4,623 முறை பூமியை சுற்றி வந்துள்ளார். மொத்தம் 196.7 மில்லியன் கிலோமீட்டர் பரப்பளவிலான விண்வெளிப் பகுதியில் அமெரிக்கர் விட்சனின் கால்தடம் பதிந்தது.

விண்வெளியில் அதிக நாட்களை செலவிட்ட முதற் பெண் விஞ்ஞானி என்ற சாதனையை பெக்கி விட்ச‌ன்(Astronaut Peggy Whitson) பதிவு செய்துள்ளார்.