மைக்ரோசாஃப்ட், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஐ நிறுத்திக்கொண்டது

Microsoft Ends the Sale of Windows 7 And Windows 8.

உலகின் மிகப் பிரபலமான‌ விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 விற்பனையினை (Windows 7 & Windows 8 for PC ) மைக்ரோசாப்ட் ((Microsoft) நிறுவனம் நிறுத்திக்கொண்டது. இந்த‌ ஆப்பரேட்டிங் சிஸ்டம்களின் புதிய விற்பனை செயல்பாடுகள் (Microsoft stops sale of Windows 7 & Windows 8 OS) இனி நிறுத்தி கொள்ளப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிக்கைப்படி, புதிதாக தயாரிக்கப்படும் கணினிகளில் அல்லது லேப்டாப்களில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஓஎஸ் இன்ஸ்டால் (Pre-installed windows 7 and 8) செய்யப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது. ஆக‌, இனி வரும் எல்லா கணினி, மடிகணினிகளிலும் விண்டோஸ் 10 இயங்குதளம் (Windows 10 OS) பதிவேற்றம் செய்யப்பட்டு விற்பனைக்காக‌ வடிவமைக்கப்படவுள்ளன‌. பழைய விண்டோஸ் 7 மற்றும் 8/ 8.1 இயங்குதளங்களை உபயோகபடுத்துபவர்கள் இன்னும் சில வருடம் வரை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் இந்த‌ குறிப்பிட்ட இயங்குதள பதிப்புகளை தனது சில்லறை விற்பனையாளர்கள் (Retailers) அல்லது அசல் கருவி உற்பத்தியாளர்களூக்கு (Original Equipment Manufacturers / OEM) விற்பனைக்காக‌ வழங்கும் செயலினை நிறுத்திக்கொள்ளும் நாள்தான் விண்டோஸ் 7 மற்றும் 8/ 8.1 இயங்குதளன்களின் கடைசி (இறுதி) விற்பனை (End Of Sale) தேதியாக‌ குறிக்கின்றது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஓஈஎம் (OEMs) எடுத்துக்காட்டுகள் : டெல் (Dell) மற்றும் தோஷிபா (Toshiba), பீசி உற்பத்தியாளர்கள் (PC manufacturers) பெரும்பாலும் விண்டோஸ் மென்பொருள்களை நிறுவிய‌ பிறகு விற்பனை செய்கின்றன‌.

மைக்ரோசாஃப்ட்டின் விண்டேஸ் 7 இயங்குதளம் 2009 ஆம் ஆண்டும், விண்டோஸ் 8 இயங்குதளம் 2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாள் : 05.11.2016 திருத்தம் : 07.11.2016

புதியவை / Recent Articles