மைக்ரோசாப்ட் உங்களது விண்டோஸ் 10 கருவியிலுள்ள‌ டேட்டாவை எளிதில் லாக் செய்ய அனுமதிக்கும்

Microsoft with its new windows 10 update makes a way easier to lock down your Windows 10 device data

விண்டோஸ் 10 இல், மைக்ரோசாப்ட், முன்பை விட அதிகமாக‌ மேகக் கணிமையுடன் (கிளவுட் கம்ப்யூட்டிங் / cloud computing) இணைத்துவிட்டதால் விண்டோஸ் OSஇனை (Windows 10 OS) மேலும் மேம்படுத்தி பல‌ பயனுள்ள அம்சங்களை செயல்படுத்தி உள்ளது. எனினும், உங்கள் தனிப்பட்ட தரவுகளும் (data privacy) மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்வர்களில் பதிவேற்றப்படுகிறது என்றுதான் அர்த்தம்.

மேலும் எந்தெந்த தகவல்களை உங்கள் கருவிகள் பகிர‌ (share datas) வேண்டும் என்பதனையும் கட்டுப்படுத்த இப்போது வழிகள் உள்ளன. மைக்ரோசாப்ட் இவற்றைச் செய்துகொள்வதற்கான‌ செற்றிங்ஸ்களை அதன் புதிய வலை அடிப்படையிலான டேஷ்போர்டில் (Web-based dashboard) ஒரே இடத்தில் எளிதாக செய்துகொள்ள‌ அனுமதிக்கிறது (Easy all-in-one dashboard by Microsoft).

உங்களது விண்டோஸ் கருவியில் account.microsoft.com/privacy க்குச் செல்லுங்கள், நீங்கள் இருக்கும் இடம், பிங் தேடல், Cortana நோட்புக்கில் சேமிக்கப்படும் தகவல்கள் மற்றும் உலாவல் வரலாறு ஆகியவற்றைப் பார்ப்பீர்கள் (இங்கு தான் உங்களது தனிப்பட்ட‌ தகவல்களின் செட்டிங்க்ஸ்).

மைக்ரோசாப்ட் மேலும் பல‌ செயல்பாடுகளை அதன் டேஷ்போர்டில் சேர்த்துக்கோண்டேயிருக்கும் என்றும் அதன் அப்ளிகேஷன்கள் வழியாக‌ தனியுரிமை கட்டுப்பாடுகளைக்கா (Privacy Controls) காலப்போக்கில் சேர்க்கும் என்றும் மைக்ரோசாஃப்ட் தெரிவிக்கின்றது.

இதற்காக‌ மைக்ரோசாப்ட் முதல் முறை ஓஎஸ் இன்ஸ்டால் (first time installation of Microsoft windows 10) செய்துகொள்ளும் பயனர்களுக்கு தனியுரிமை அமைப்புகளை எளிமைப்படுத்தும்விதத்தில் அதன் விண்டோஸ் 10ந் செயல்முறை அமைப்பினை புதுப்பிக்க‌ உள்ளது,

நாள் : 11.01.2017 திருத்தம் : 11.01.2017

புதியவை / Recent Articles