மைக்ரோசாப்ட் லினக்ஸ் ஃபவுண்டேஷனில் சேர்கின்றது : விசித்திரமா இருக்கு !!!

microsoft-goes-for-opensource
Software

Microsoft joins the Linux Foundation and wishes to collaborate with the open source community.

15 ஆண்டுகளுக்கு முன்னர் மைக்ரோசாஃப்டின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பால்மர்(Ballmer), லினக்ஸை(Linux) ஒரு 'புற்றுநோய்' என அழைத்தார். ஆனால் இப்போது நிலையானது தலைகீழாகியுள்ளது. மைக்ரோசாஃப்ட் திறந்த மூல நிரல்களுக்கு பொறுப்பேற்று தன்னை பலப்படுத்திக் கொள்கிறது.

In 2001, Microsoft CEO Steve Ballmer described Linux as a “… cancer that attaches itself in an intellectual property sense to everything it touches.”

லினக்ஸ் ஃபவுண்டேஷனில் உறுப்பினராகும் மைக்ரோசாப்ட், பிளாட்டினம் உறுப்பினராக சேர்ந்து ஆண்டுதோறும் $ 500,000 சந்தாப் பணமாக செலுத்த உள்ளது (By Joining Linux Foundation as a Platinum member Microsoft will be paying membership dues of $500,000 annually).

10 ஆண்டுகளுக்கு முன்னர் மூடிய-மூலநிரல்வழி கொண்ட‌ விண்டோஸ் (Microsoft Windows), ஆஃபீஸ் (Microsoft office) போன்ற‌ தனியுரிம மென்பொருட்களை (closed-source proprietary software) வழங்குவதில் பேரரசாக விளங்கியது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். ஆனால் சமீபகாலமாக‌ மைக்ரோசாப்ட் திறந்த மூல நிரல்களை (open source) சீராகத் தழுவி வருகிறது.

2012 இல், முதல் 20 லினக்ஸ் கர்னல் பங்களிப்பாளர்களில் ஒன்றாக மைக்ரோசாஃப்ட் இருந்தது (Microsoft one of the top 20 contributors to the Linux Kernel). 2014 ஆம் ஆண்டில், தனது .நெட் மைய‌ கட்டமைப்பை (.NET Core Framework) திறந்த‌ மூல‌ நிரலாக்கியது. இதற்கு அடுத்த வருடத்தில் விஷுவல் ஸ்டுடியோ குறியீடினையும் (Visual Studio Code) மூல‌ நிரலாக்கிக் கொண்டது மைக்ரோசாஃப்ட்.

மேலும் Hadoop மற்றும் சம்பா (Samba) போன்ற‌ ஏனைய உயர் மட்ட திறந்த மூலனிரல் திட்டங்களின் வளர்ச்சிக்கு மைக்ரோசாஃப்ட் ஒத்துழைத்துள்ளது. மென்பொருட்களை தயாரிக்கும் மைக்ரோசாஃப்ட், சமீபத்தில் பவர்ஷெல் (PowerShell), விஷுவல் ஸ்டுடியோ குறியீடு, மற்றும் மைக்ரோசாப்ட் எட்ஜ் இன் ஜாவா ஸ்கிரிப்ட் பொறி (nd Microsoft Edge's JavaScript engine) ஆகியவற்றையும் திறந்த மூல‌ நிரலாக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட், கோனோனிகல் தயாரிப்பான‌ உபந்துவை விண்டோஸ் 10இல் கொண்டு வருவதற்கு கோனோனிகல் நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்துள்ளது ( Microsoft also partnered with Canonical to bring Ubuntu to Windows 10) , மற்றும் மொபைல் பயன்பாடுகளை உருவாக்கம் செய்வதில் உதவுவதற்காக ஸமாரின் மென்பொருள் நிறுவனத்தினையும் ( Xamarin ) கையகப்படுத்தியது.

நாள் : 18.11.2016 திருத்தம் : 18.11.2016

புதியவை / Recent Articles