Google Music Assistant
Software

Google Assistance Do the Needful to Find Out Which Song is Playing Nearby

Google Assistant இன் இசை கண்டறிதல் மென்பொருளானது இந்நாள் வரையிலும் அறியப்படாத பாடல்களை அறிந்து கொள்ளதற்கென‌ அதிக‌ அலவில் பயன்படுத்தப்பட்டு வந்த‌ Shazam க்கு கடுமையான போட்டியாக‌ விளங்க‌ உள்ளது. இந்த‌ கூகுள் அசிஸ்டெண்டின் புதிய அப்டேட் வழியாக‌ நம்மை சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் பாடல் பற்றிய தகவல்களை தேடித்தரும்படி உருவாக்கப்பட்டுள்ளது . இத்துடன் தேடப்பட்ட‌ பாடலின் யூடியூப் பக்கம் ( இணைப்பு ), கூகுள் ப்ளே ஸ்டோரில் பக்கம் ( இணைப்பு), கூகுள் தேடியந்திர தேடல் பக்கம் என அனைத்தும் தரப்படும்.

கூகுள் பிக்ஸல் 2 மற்றும் பிக்ஸல் 2 எக்ஸ்.எல் மொபைல்களில் பயன்படுத்தபட்ட‌ இந்த வசதி தற்போது அனைத்து ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களிலும் பெறலாம். "என்ன பாடல் இது?" என்று கேட்க, Google உதவி பயன்பாட்டைத் தூண்டுவதற்காக ஆண்ட்ராய்டு பயனர்கள் ஹோம் பட்டனை சிறிது நேரம் அழுத்தினால் போதும். இந்த பாடல் பற்றிய‌ முழுமையான தகவலுடன் தலைப்பு, கலைஞர் மற்றும் பாடல்களின் சிறு பகுதியையும் காண்பித்துவிடும் .