LinkedIn-open-candidate
Gadgets

LinkedIn will let you seek new job opportunities unknown to current employer

நீங்கள் புது வேலையினைத் தேடுகிறீர்கள் என‌ தற்போது வேலைசெய்யும் நிறுவனம் கண்டறிந்துவிட்டால் அது உங்களின்மீது தவறுதலான‌ பார்வையினை தந்துவிடும். ஒரு புதிய திசையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்ணத்துடன் வேலை தேடுபவரா ?. இனி பிரச்சனை இல்லை. இதனைத் தவிர்க்க‌ லிங்க்ட்இன் (LinkedIn), உங்களது தற்போது பணிபுரியும் நிறுவனத்திற்கு எவ்வித‌ தகவலும் தெரியாமலேயே வேலைக்கு ஆட்களை தேடும் நிறுவனங்களுக்கு அறிவிப்பினை அளித்துவிடும்.

லிங்க்ட்இன், "Open Candidates" எனும் புது சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் நீங்கள் வேலைமாற்றம் செய்ய‌ (புது வேலை தேட‌) விரும்புபவர் என‌ ஆள்தேடும் நிறுவனங்களுக்கு சிக்னல் (சமிக்ஞை) செய்யும்.

அம்சம் பற்றிய‌ புதுமை என்னவென்றால் உங்களின் தற்போதைய நிறுவனத்திற்கு தகவல் அடைவதில்லை. அதே போல் உங்கள் நிறுவனத்திற்கு தொடர்புடைய எந்த மூன்றாம் தரப்பு நிறுவனத்திற்கும் சென்றடையாமல் பாதுகாக்கப்படும்.

இச்சேவையை பயன்படுத்த‌ நீங்கள் வேலைவாய்ப்பு பக்கத்திற்குச் (Jobs page) சென்று Preferences இனை தேர்வு செய்யுங்கள். இப்போது நீங்கள் ஆர்வமாக இருக்கும் பணி வகைகளுடன் சில விவரங்கள் குறித்த‌ தகவல்களை பூர்த்தி செய்ய கேட்கப்படுவீர்கள்.

தற்போதுவரை அமெரிக்க, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் (US, UK, Canada and Australia) மட்டுமே "Open Candidates" சேவை வழங்கப்படுகிறது. உலகளவில் வெகுசீக்கிரம் இந்த‌ வசதி வந்துசேரும் என‌ லிங்க்ட்இன், கூறுகின்றது.

இந்த‌ "Open Candidates" அம்சம் குறித்த‌ விரைவான டெமோவினை வீடியோவில் பாருங்கள்.