ஃபேஸ்புக் மெசஞ்சர் பயன்பாட்டில் குரூப் காலிங்

Gears

Use latest Facebook Messenger App to experience this group calling feature on Your Mobile

ஆதாரம் பேஸ்புக் மெசஞ்சர், கூஃகிள் பிளே பக்கம்

Get Facebook Messenger's 'Group Calling' feature on Your Mobile

You will need the latest Facebook Messenger App to experience this group calling feature on Your Mobile.

பேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் பயன்பாடு (Facebook Messenger) இப்போது குழுஅழைப்பு (Group Calling) செய்வதற்கு அனுமதிக்கின்றது. ஒவ்வொரு பயனாளருக்கும் இந்த‌ குழு அழைப்பு செய்ய‌ முடியும். ஒரே நேரத்தில் 50 பங்கேற்பாளர்கள் (Participants) குழு அழைபினில் சேர அனுமதிக்கின்றது. பயன்பாட்டினை மெருகேற்றவும், பயனாளர்களுக்கு புதுப்புது வசதிகளை வழங்கிவரும் சமூக‌ ஊடகங்களின் போட்டிகளுக்கு இடையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் குரூப் காலிங் வசதி சேர்க்கப்பட்டாலும் குரூப் (குழு) வீடியோ அரட்டைகள் (Group Video Chat) செய்வதற்கு ஸ்கைப் அல்லது கூகுள் Hangouts ஐப் பயன்படுத்த வேண்டும்.

பெருகிவரும் மெசஞ்சர் பயன்பாடு (Messenger Apps) நிறுவனங்களின் போட்டியால், வரும் நாட்களில் ஃபேஸ்புக்கினையும் குழு வீடியோ அரட்டைகள் செய்யும் வசதியினைச் சேர்த்துக்கொள்ளத் தூண்டும்.

பேஸ்புக் மெசஞ்சர் ஆப் தற்போது 90 கோடி (900million) செயலிலிருக்கும் மாதாந்திரப் பயனாளர்களைக் கொண்டுள்ளது; அவர்களில் பலரும் இந்த‌ குழு வீடியோ அரட்டை வசதிக்காக ஆவலாய் காத்திருக்கின்றனர்.

குழு அழைப்பின் போது, Messenger பயன்பாட்டினில் (App) குழுப் பெயர் மற்றும் பங்குபெறும் பயனர்களின் பட்டியலில் காண்பிக்கப்படும். அழைப்பு வருகிறது என்றால் பயனர்கள் ஏற்க அல்லது மறுக்கலாம் என்ற‌ வசதியும் உள்ளது. இந்த குழு அழைப்பு அம்சமானது, பல குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் வணிக தொடர்புகளுக்கு அழைப்பு விடுத்து பேசுவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.


நாள் : 23.04.2016 திருத்தம் : 23.04.2016