Twitter Updates Mute feature
Gadgets

Twitter has a Lot of Updates for its users ; the Mute feature, An offensive tweet Reporting.

பேஸ்புக்கை தொடர்ந்து அதிக மக்கள் விரும்பும் சமூக வலைதளங்களில் ஒன்றாக‌ ட்விட்டர் திகழ்ந்து வருகிறது. ட்விட்டர் தனது சமூக‌ தள மேடையினை (Twitter - Social networking platform) காலத்திற்கேற்ப‌ அப்டேட் செய்துகோண்டே வருவதும் மிக‌ அவசியமானதாகும். பலவகை அப்டேட்களை தற்போது செய்துள்ள‌ ட்விட்டர் இப்போது மியூட் (Mute) சம்மந்தமான ஒரு அப்டேட்டினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரையிலும், ட்விட்டரில் பயனர் ஒருவர் பாலோ (follow Twitter Id) செய்யும் ஐடியின் ட்வீட்கள் பிடிக்கவில்லை என்றால் அந்த ஐடியை மியூட் (Mute) செய்வதனால் அந்த‌ ஐடிக்கான‌ ட்வீட்ஸ் நம் டைம் லைனில் (Tweets wont appear in Your Timeline) காண்பிக்கப்படாது. புதிதான‌ மியூட் அப்டேஷனில் (Mute updation) ஒரு ஐடி நமக்கு அனுப்பும் நோட்டிபிகேஷனையும் கூட மியூட் (You can Mute notifications) செய்யும் வசதி வந்துள்ளது.

ட்விட்டர் மேடையில் வார்தைகள் மற்றும் வாக்கியங்கள் கொண்டு துஷ்பிரயோகம், அச்சுறுத்தல், துன்புறுத்தல் போன்ற‌ செயல்களை சமாளிக்க உதவும் புதிய நடவடிக்கைளும் சேர்க்கப்பட்டுள்ளன‌. இதற்காக‌ ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தில் வரும் ட்வீட்கள் நமக்கு வேண்டாமென்று தோன்றினால் அந்த வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களையும் தற்போது மியூட் (Mute) செய்து கொள்ளலாம். இப்படி செய்வதனால் ட்வீட்ஸ் நம் டைம் லைனிலும்,நோட்டிஃபிக்கேஷனிலும் காண்பிக்க கூடாத‌படி இப்புது அப்டேட்டானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரின் 'முடக்கிய வார்த்தைகள் (Muted Words)' அம்சம் பயனர்களுக்கு உளைச்சல் கொடுக்கும் உள்ளடக்கத்தைக் திறன்பட‌ கண்டறிந்து வடிகட்ட ( filter out disturbing tweet content) அனுமதிக்கிறது. இந்த‌ புதிய அப்டேட்டிற்கு பயனடர்களிடமிருந்து நல்ல‌ வரவேற்பினை பெற்ற‌ ட்விட்டர் மேலும் ஒரு அப்டேட்டினையும் தந்துள்ளது. இப்போது வரை, பயனர்கள் கடுப்பான‌ (வெறுப்பான‌) நடத்தை சம்பந்தமான‌ நிகழ்வுகளை ட்விட்டரின் துஷ்பிரயோகம் அல்லது தொல்லைகள் என்ற பெயரின் கீழ் மட்டுமே தெரிவிக்க முடியும்.

புதிய அப்டேட்டில் பயனர் த‌வறான நடத்தையைக் (misconduct) கண்டறிந்தால் ட்விட்டர் அறிக்கை பிரிவில் (report to Twitter about abuse and harassment) வேண்டாத‌ நடத்தை குறித்து எளிதாக தெரிவிக்க‌ முடியும். இச்செயல் மீண்டும் மீண்டும் இலக்காகியிருக்கும் குழுக்கள் மற்றும் பயனரை எளிதில் கண்காணிக்க ட்விட்டருக்கு வழி செய்யும்.

இந்த புது வசதியை திறம்பட‌ செய்யவும் மற்றும் இசைவாய் செயல்முறையாக்கவும் , ட்விட்டர் உலகளாவிய மறுபயிற்சி திட்டத்தின் மூலம் இக்கொள்கைகளை கட்டாய செயலுறுத்தம் செய்ய‌ உள்ளது (Twitter to enforce these policies through a global retraining program).

தொல்லைகள் மற்றும் துன்புறுத்தல்கள் என‌ புகார் அறிக்கைகள் ஒரு நபருக்கு எதிராக‌ நிரப்பப் ப‌டுகின்றன என்றால் (harassment reports filed against an individual) அந்ந‌பருக்கு என்ன நடக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.

Twitter-harassment-report-form