வெளியிட்ட தேதி : 02.10.2017
Facebook Blood Donor status
Gadgets

Facebook Blood Donation donor page. Facebook to match blood donors with people who need it

பேஸ்புக், இந்தியாவில் இரத்த பற்றாக்குறையை பாதுகாப்பானதாக‌ தீர்க்க உதவுகிறது. இதன் காரணமாக‌, மக்கள் இரத்த தானம் வழங்குந‌ர்களுடன் (Blood donor) தொடர்பு கொள்வதற்காக ஃபேஸ்புக் சமூக நெட்வொர்க்கை உபயோகம் செய்ய‌ உள்ளது.

அக்டோபர் (2017) முதல், இந்தியாவில் உள்ள பயனர்கள் தங்களின் சுயவிவரத்தின் மூலம் (facebook profile) நன்கொடையாளர்களாக பதிவு செய்யலாம் அல்லது News Feed இல் நியமிக்கப்பட்ட விளம்பர செய்தியைக் கிளிக் செய்வதன் மூலமாகவும் பதிவு செய்ய முடியும்.

இரத்த‌ தான‌ பதிவில் உங்கள் இரத்த வகை மற்றும் நீங்கள் இதற்கு முன் இரத்த தானம் செய்துள்ளீர்களா போன்ற தகவல்களை சமர்ப்பிக்கும்படி கேட்கும். பேஸ்புக் உங்கள் விவரங்களைத் தனிப்பட்ட முறையில் வைத்திருப்பதாக (your details private) வாக்களிக்கிறது. ஆனால் ஃபேஸ்புக் டைம்லைனில் (facebook timeline) ம‌ற்றவர்களுடன் நன்கொடையாளர் என‌ நீங்கள் பகிர்ந்து கொள்ள முடியும்.

மேலும், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுடன் இரத்த தானம் செய்பவர்களை (facebook connects blood donor) எளிதில் இணைக்கின்றது. ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் பயனர் கோரிக்கைகளை உருவாக்கவும், சிறப்பு பதிவுகளை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

இரத்தம் தேவைப்படுபவர் (People in need for Blood) வசிக்கும் இடத்திற்கு அண்மையில் உள்ளவர்களிடமிருந்து இரத்தம் தானமாகவும் பெற்றுக்கொள்ள முடியும். ஃபேஸ்புக் போஸ்ட் ( இடுகையை) ஐ மறுபரிசீலனை செய்த பின்னர், தானம் செய்பவர்க‌ள் நேரடியாக, WhatsApp, Messenger அல்லது ஃபோன் கால் மூலமாக கோரிக்கைக்கு பதிலளிக்க முடியும்.

உங்களது விவரங்களைத் தேட விரும்பும் நபரிடமிருந்து மறைத்து வைத்துக் கொள்ளவும் முடியும். இப்போது அண்ட்ராய்டு மற்றும் மொபைல் வலையில் மட்டுமே இந்தச் சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிய‌ வருகின்றது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.