உலகின் மிக‌ உயரமான வெப்பமண்டல மரம்; 309 அடி உயரம் ????

Biologists located the world’s tallest tropical tree, a 94.1-metre (309-foot).

நாம், சிறந்தது, மிகவும் பெரியது... உலகில் எது சிறந்தது என்பதனை அறிந்துகொள்ள‌ மிகுந்த‌ ஆர்வத்துடன் செவி கொடுப்போம். இங்கே இயற்கை வளர்த்த‌ பெரும் மரத்தினையும் அதன் உயரம் எவ்வள‌வு என்பதனையும் அறியப்போகிறோம்.

உயிரியலாளர்கள் 94.1 மீட்டர் (309 அடி) கொண்ட‌ உலகின் உயரமான வெப்பமண்டல மரத்தினை (world’s tallest tropical tree traced by Biologists), போர்னியோவில் கண்டுபிடித்துள்ளனர். இம்மரம் தனித்து நிற்கவில்லை, இதுபோன்று உயரமான‌, வேறு 49 மரங்களால் சூழப்பட்டுள்ளது.

இம்மரம் கார்னெகீ ஏர்போர்ன் அப்சர்வேட்டரி எனும் விமானம் (Carnegie Airborne Observatory aircraft) மூலம் LiDAR தொழில்நுட்பம் ( LiDAR technology) பயன்படுத்தி அடையாளம் கண்டுள்ளனர்.

LIDAR என்பது Light Detection and Ranging என்பதை குறிக்கும். LIDAR எனப்படும் தொலை உணர்வு முறை, தூரம் மற்றும் எல்லைகள் அளவிட ஒரு துடிப்பு போன்று (தொடர்ச்சியாக‌ கதிர் வீசாமல்) லேசர் வடிவ ஒளியை பயன்படுத்துகிறது -- அடிப்படையில் ஒரு ஒளி சார்ந்த ரேடார் போன்றது. LIDARஆல் அளவிடப்படும் உயரம் போதுமான துல்லியத்துடனும், நம்பத் த‌குந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இம்மரமானது தென் கிழக்கு ஆசியாவிலுள்ள‌, உலகின் மூன்றாவது மற்றும் ஆசியாவில் மிகப்பெரிய தீவுமாய் விளங்கும் போர்னியோ (Borneo) வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரையிலும் அதிக‌ உயரமான 49 மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அவை 90மீட்டர் உயரம் கொண்டவை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள‌ 50வது மரம் மற்ற‌ மரங்களை விடவும் உயரமாக இருக்கின்றது.

நாள் : 18.11.2016 திருத்தம் : 18.11.2016

புதியவை / Recent Articles