ஒட்டக்கூடிய சூப்பர் டேப் - ஐ!! அனைத்து திரவங்களுக்கு எதிராகவும் ஒட்டலாம்

superomniphobic tape
அறிவியல்

Superomniphobic tape that adheres to anything and rejects all liquids

அனைத்து திரவங்களையும் நிராகரிக்கின்ற‌ (All liquid repellent tape) ஒட்டக்கூடிய டேப்பினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சூப்பர் ஆம்னி ஃபோபிக் டேப் (superomniphobic tape) என‌ அழைக்கப்படும் இந்த‌ ஒட்டக்கூடிய டேப்பினை அனைத்து திரவங்களுக்கு எதிராகவும் ஒட்டலாம்.

சூப்பர் ஆம்னி ஃபோபிக் (Superomniphobic) பரப்பானது திரவங்களை எதிர்த்து நிராகரிக்கும் ஆற்றல் கொண்டவை. எனவே திரவங்கள் சூப்பர் ஆம்னி ஃபோபிக் (Superomniphobic) பரப்புகொண்ட‌ பொருட்களிலிருந்து விலகிச் செல்கின்றன‌. பொதுவாக சூப்பர் ஆம்னி ஃபோபிக் (Superomniphobic) பரப்புகள், திரவ மற்றும் திட ப‌ரப்புகளுக்கிடையே ஒரு காற்றணையினை (air cushion) உருவாக்குகின்றன‌.

இப்போது, கொலராடோ மாநில பல்கலைக்கழகத்தில் ( Colorado State University ) மெக்கனிக்கல் எஞ்சினியரிங் துணை பேராசிரியராக (assistant professor of mechanical engineering) விள‌ங்கும் அருண் கோட்டா ( Arun Kota ), வலுவான திரவ-விலக்கு பண்புகளை ( liquid-repelling properties) பெற்ற‌ அனைத்து பரப்புகளிலும் ஒட்டிக்கொள்ளும் மற்றும் திரவங்களை விலக்கி ஒட்டிக்கொள்கின்ற‌ மேற்பரப்பினைக்கொண்ட‌ டேப்பினை உருவாக்கியுள்ளர்.

இதற்கான‌ எண்ணக்கரு முற்றிலும் புதிமையானதாகும்தி. இதற்காக‌ ஆராய்ச்சியாளர்கள் 2007 ஆம் ஆண்டு முதல் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, superomniphobic பரப்புகள் மிகவும் சிக்கலான மற்றும் அதிக‌ விலையுள்ள‌ பொருளானதால் பயிற்சி பெற்ற நிபுணர்களால் மட்டுமே உருவாக்க முடியும். ஆனால் இப்போது, முனைவர் மாணவர் ஹாமித் Vahabi மற்றும் உதவியாளருமான டாக்டர் சக வேய் வாங், கோட்டா ஆகியோர் சேர்ந்தும் ஒரு எளிமையான நுட்பத்தை உருவாக்கி - யார் வேண்டுமானாலும் சூப்பர் ஆம்னி ஃபோபிக் டேப்களை உருவாக்க‌ முடியும் என்கின்ற‌ நிலைமைக்கு கொண்டுவந்துள்ளனர்..

சூப்பர் ஆம்னி ஃபோபிக் டேப்களுக்கான‌ (Superomniphobic tapes) தேவைகள் எண்ணற்றன‌ மற்றும் முடிவில்லாமல் நாம் தினசரி உபயோகிக்கும் பொருட்களில் ஒன்றாகவும் இருக்கும்.

மழை அல்லது தண்ணீர் சேதத்தினைத் தவிர்க்க, ஸ்மார்ட்போன் திரைகளில், கண்ணாடிகள் (smartphone screens, glasses), மற்றும் கேமராக்கள் மீது அதை பயன்படுத்த முடியும். மருத்துவ தொழில் பயன்பாடு, மற்றும் உணவு துறையிலும் பயன்படுத்த் முடியும். ஆனால் என்னதான் புது கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டாலும், அனைத்துமே காரணிகளை நம்பியுள்ளது: விலை மற்றும் ஆயுள் என‌ மக்களுக்கு பெறுதற்குரியதாக‌ இருக்க‌ வேண்டும்.

நாள் : 22.10.2016 திருத்தம் : 22.10.2016