பூமி போன்ற இன்னொரு கிரகம் !!, கண்டறியப்பட்டது ??.

Recently discovered Earth-like planet Proxima-b could contain water and perhaps even life.

பூமி போன்ற இன்னொரு கிரகம் ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் கண்டறியப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் சூரிய மண்டலத்துக்கு (solar system) வெளியில் பூமி போன்ற‌ பல‌ கிரகங்களைக் கண்டறிந்திருந்தாலும் பூமியை ஒத்திருக்கின்றது என்றில்லாமல் உயிர் வாழும் சாத்தியக் கூறுகள் மிகமிகக் குறைவு. ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ப்ராக்ஸிமா ஆ (Proxima b) பூமிக்கு மிக நெருக்கமாக உயிரினங்கள் வாழ‌ உகந்ததாய் இருக்கும் என‌ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட‌ Proxima b சுமார் 4.2 ஒளியாண்டுகள் (4.2 light-years away / about 25 trillion miles) தொலைவில், Proxima Centauri நட்சத்திர மண்டலத்தில் (Star Galaxy) சுற்றிவருகிறது. Proxima b உருவில் சிறியதாய் இருந்தாலும் அதன் க‌திர்வீச்சு அளவு (Radiation) நமது சூரியன் வெளியிடுவவதை விட மிக அதிகமாக இருக்கும். கதிர்வீச்சு அதிகமாய் இருப்பதால் உயிர் வாழ‌ சாத்தியங்கள் குறைவு என்ற‌ கேள்வியும் எழும்பியுள்ளது.

புதிதாக உறுதி செய்யப்பட்ட‌, ப்ராக்ஸிமா ஆ பத்தாண்டுகளுக்கு முன் க‌ண்டுபிடிக்கப்பட்டது ஆகும். அதன் தூரம், வானியல் காரணமாக‌ ஆராய்ச்சியாளர்கள் அவர்கள் பார்த்தது உண்மையில் ஒரு கோள் தானா ? என‌ தெளிவான ஆதாரம் வழங்க இயல்வில்லை என்பதுதான் உண்மை.

இன்றோ ஆராய்ச்சியாளர்கள் பல‌ ஆற்றல்மிகு தொலைநோக்கிகள் (multiple high-powered telescopes) உதவியுடன் ப்ராக்ஸிமா ஆ (Proxima b) வை கவனமாக ஆராய்ந்து ஒரு கிரகம்தான் (Planet) என‌ உறுதிசெய்ய‌ வழிவகுத்தது.

துரதிருஷ்டவசமாக, கிரகத்தில் உயிர்வாழ‌ முடியுமா என்பதை உறுதிப்படுத்த, விஞ்ஞானிகள் கிரகத்தின் ப‌டங்களை படிக்க வேண்டும். தற்போது, அத்தகைய ஒரு புகைப்படத்தை பிடிக்கும் கருவிகள் ஏதும் இல்லை. பூமியில் இருந்து ஒப்பீட்டளவில் நெருக்கமான தூரத்தில் இக்கிரகம் இருப்பதால், ஒரு நாள் அதன் மேற்பரப்பு பற்றி ஆராய ரோபோக்கள் (Robots) அனுப்பப்படலாம் !!.

நாள் : 25.08.2016 திருத்தம் : 21.09.2016

புதியவை / Recent Articles